முரசொலி தலையங்கம்

மணிப்பூர் கலவரம் : “மக்களை குழப்பி வன்முறையை அதிகமாக்குவதுதான் பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி” - முரசொலி !

பாஜகவுக்கு இரண்டு என்ஜின்கள் இருந்தாலும் வண்டி ஓடவில்லை. ஆட்கள் தள்ள வேண்டிய நிலைமையில்தான் இருக்கிறது என்பதே மணிப்பூர் மாநில ஆட்சி நிலைமையும், ஒன்றிய ஆட்சியின் நிலைமையும்!

மணிப்பூர் கலவரம் : “மக்களை குழப்பி வன்முறையை அதிகமாக்குவதுதான் பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி” - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மணிப்பூரில் பா.ஜ.க.வும் எரிகிறது!

அடுத்த கட்சிகளை அச்சுறுத்துவதிலேயே பா.ஜ.க. காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறது. மணிப்பூரில் என்ன நடந்திருக்கிறது பார்த்தீர்களா? சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களே பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி இருக்கும் கேவலத்தைப் பார்க்கிறோம்!

பல மாதங்களாக எரிந்து கொண்டிருக்கிறது மணிப்பூர். பெரும்பான்மை மைத்தி சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தது பா.ஜ.க. அரசு. இதற்கு குகி சமூக மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். கடந்த மே மாதம்

3 ஆம் தேதி எரியத் தொடங்கியது மணிப்பூர், இன்னமும் அணைய வில்லை நெருப்பு. அதனை அடக்குவதற்கு ஆளும் மாநில பா.ஜ.க. அரசாலும் முடியவில்லை. ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க.வின் அரசாலும் முடியவில்லை. ‘யாராக இருந்தாலும் தாக்கித் தகர்த்துவிடுவார்’ என்று பூதாகரம் காட்டும் அமித்ஷாவாலும் முடியவில்லை.

இதுவரை 150 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். நூற்றுக்கணக் கானவர்கள் காயமடைந்துள்ளார்கள். அந்த மாநிலத்தை விட்டு 50 ஆயிரம் பேர் வெளியேறிவிட்டார்கள். 2000 கடைகள் இதுவரை எரிக்கப்பட்டுள்ளன. 5000 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இணைய தள சேவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வழிபாட்டுத் தலங்கள் எரிக்கப் பட்டுள்ளன. காவல் துறை அதிகாரி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் தாக்கப்படுகின்றன. 11 மாவட்டங்களில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.

மணிப்பூர் கலவரம் : “மக்களை குழப்பி வன்முறையை அதிகமாக்குவதுதான் பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி” - முரசொலி !

ரைபிள் படைப்பிரிவின் ஆயுதக் கிடங்கில் புகுந்து துப்பாக்கிகளை கொள்ளையடித்துப் போய்விட்டார்கள். ‘துப்பாக்கியைக் கொண்டு வந்து கொடுத்துவிடுங்கள்’ என்று அவர்களுக்கு அன்பான அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. ஆட்சி.

மணிப்பூர் காவல் துறை இருக்கிறது. மத்திய ஆயுதப் படை போலீஸ் வந்துள்ளது. அசாம் ரைபிள் படையும், இந்திய ராணுவமும் வரவழைக்கப் பட்டுள்ளன. யாராலும் அடக்க முடியவில்லை போராட்டங்களை. எனவேதான் ஆளும் பா.ஜ.க. அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்பது எம்.எல்.ஏ.க்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

« கரம்ஷியாம் சிங்

« தோக்சோம் ராதே ஷியாம் சிங்

« நிஷி கண்ட் சிங் சபம்

« குவைராக்பம் ரகுமணி சிங்

« பிரோஜன் சிங்

« டி.ரபிந்ரோ சிங்

« எஸ்.ரஜேன் சிங்

« எஸ்.கேபி தேவி

« ஒய்.ராதே ஷ்யாம் - ஆகிய ஒன்பது பா.ஜ.க. உறுப்பினர்கள் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

* பா.ஜ.க. அரசு மீதும், நிர்வாகத்தின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்க சிறப்பான நடவடிக்கையை உடனடியாக எடுத்தாக வேண்டும்.

* மைத்தி மற்றும் குகி இனத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.

* அமைதியை நிலைநாட்டுவதற்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான பாதுகாப்புப் படைகளை நிறுத்த வேண்டும்.

* மாநிலத்தின் ஒருமைப்பாட்டில் எந்தவிதமான சமரசமும் செய்யக் கூடாது.

* குறிப்பிட்ட சமூகத்துக்கான தனிநிர்வாகம் என்ற வேண்டுகோள் எக்காரணத்துக்காகவும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடாது. - என்ற ஐந்து கோரிக்கைகளை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ளார்கள்.

மணிப்பூர் கலவரம் : “மக்களை குழப்பி வன்முறையை அதிகமாக்குவதுதான் பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி” - முரசொலி !

முதல்வர் பிரேன் சிங்க்கு ஆதரவான மைத்தி சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த அதே நாளில்தான் இந்த ஒன்பது பா.ஜ.க. எம்,.எல்.ஏ.க்கள் இந்தக் கடிதத்தை பிரதமருக்குக் கொடுத்துள்ளார்கள். பா.ஜ.க. அரசின் மீதான விமர்சனமாக மட்டுமல்ல, மணிப்பூர் பா.ஜ.க.வே இரண்டாக உடைந்து நிற்பதை இந்தக் கடிதம் காட்டுகிறது. மணிப்பூர் முதலமைச்சரின் அரசியல் ஆலோசகராக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான தோக்சோம் ராதேஷ்யாம் சிங் இருந்தார். அவரும் பதவி விலகிவிட்டார். மணிப்பூர் சுற்றுலா கழகத் தலைவர் பதவியில் இருந்து இன்னொரு பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும் விலகிவிட்டார். 60 உறுப்பினர்கள் கொண்ட மணிப்பூர் சட்டமன்றத்தில் பா.ஜ.க.வின் பலம் என்பது 32. அதில் 9 உறுப்பினர்கள் இப்போது எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் பலம் என்பதே 23 தான். பெரும்பான்மையை இழக்கத் தொடங்கி இருக்கிறது மணிப்பூர் பா.ஜ.க. அரசு.

மணிப்பூரைச் சேர்ந்த பத்து கட்சிகளின் தலைவர்கள் டெல்லி வந்தார்கள். அவர்களை பிரதமர் சந்திக்கவில்லை. பத்து நாட்களாகக் காத்திருந்தார்கள். அழைப்பு வரவில்லை. பத்து நாட்களாக அவர்கள் டெல்லியிலேயே காத்திருக்கிறார்கள். மணிப்பூர் பற்றி எரியும் போது அமெரிக்கா போய்விட்டார் பிரதமர் மோடி. உக்ரைன் பிரச்சினையை இவரால்தான் தீர்க்க முடியும் என்பார்கள். உள்ளூர் பிரச்சினையையே தீர்க்க முடியவில்லை.

முடிவெடுக்க முடியாமல் பா.ஜ.க. திணறி வருவதை மார்க்சிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி சுட்டிக் காட்டி இருக்கிறார். ‘‘மணிப்பூரில் ஆளும் பா.ஜ.க.வின் இரண்டு அமைச்சர்கள் உட்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் குகி இனத்தைச் சேர்ந்தவர்கள். குகிகளுக்கு என்று தனியாக மாநில நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். ஆனால் இங்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் ஒருங்கிணைந்த மாநிலமாக நீடிக்கும் என்கிறார். மாநில பா.ஜ.க. அரசு ஒரு விதமாகவும், ஒன்றிய பா.ஜ.க. அரசு வேறு விதமாகவும் பேசுகிறது. மக்களைக் குழப்பி வன்முறையை அதிகமாக்கி வருகிறது. இதுதான் பா.ஜ.க.வின் இரட்டை என்ஜின் ஆட்சி. இரண்டு என்ஜின்களும் முரண்பட்ட திசையில் செல்கின்றன” என்கிறார் யெச்சூரி.

இரண்டு என்ஜின்கள் இருந்தாலும் வண்டி ஓடவில்லை. ஆட்கள் தள்ள வேண்டிய நிலைமையில்தான் இருக்கிறது என்பதே மணிப்பூர் மாநில ஆட்சி நிலைமையும், ஒன்றிய ஆட்சியின் நிலைமையும்!

banner

Related Stories

Related Stories