முரசொலி தலையங்கம்

ஜல்லிக்கட்டு.. ”அண்ணாமலையின் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு” : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!

ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்தவர் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் அனுராக் தாக்கூர்.

ஜல்லிக்கட்டு.. ”அண்ணாமலையின்  அண்டப்புளுகு ஆகாசப்புளுகு” : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (25-05-2023)

அண்ணாமலையின் ஆகாசப்புளுகு!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வந் தது. அதனை எதிர்த்து பீட்டா அமைப்பு வழக்குப் போட்டது. உச்சநீதி மன்றத்தில் இரண்டு தரப்பும் வாதங்கள் வைத்து வாதாடின. தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இது தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். ஆனால். பா.ஜ.க. அண்ணாமலை. 'இது பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி' என்கிறார். இங்கே. எங்கே வந்தார் பிரதமர் மோடி?!

கடந்த மார்ச் மாதம் கூட ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன சொன்னது தெரியுமா? ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளை நாங்கள் அங்கீகரிக்க வில்லை என்றுதான் சொன்னது. மாட்டுவண்டி பந்தயம், ஜல்லிக்கட்டுப் போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை என்றுதான் சொன்னது. பாராளுமன்ற மக்களவையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.பி. ரவ் னீத் சிங், மாட்டு வண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாட்டு வண்டி பந்தயம் பிரபலம் என்று தெரிவித்து. நாட்டில் மாட்டு வண்டி பந்தயம் தடை செய்யப்பட்டுள்ளதா. ஜல்லிக்கட்டு போன்ற காளைகளை உள்ள டக்கிய விளையாட்டுகளை நடத்த அரசு அனுமதித்துள்ளதா என்பன போன்ற கேள்விகளைக் கேட்டிருந்தார்.

இதற்கு ஒன்றிய தகவல். ஒலிபரப்பு. இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித் தார். அவர் என்ன பதில் சொல்லி இருந்தார் தெரியுமா?

ஜல்லிக்கட்டு.. ”அண்ணாமலையின்  அண்டப்புளுகு ஆகாசப்புளுகு” : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!

“ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை அங்கீகரிக்கவில்லை. மாட்டு வண்டி பந்தயம், ஜல்லிக்கட்டுப் போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை.கேலோ இந்தியா உள்பட எந்தத் திட்டத்தின் கீழும் அங்கீகரிக்கவில்லை. கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும் கேலோ இந்தியா உள்ளிட்ட எந்தத் திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை” என்று தெரிவித்தவர் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் அனுராக் தாக்கூர். இதை மறைத்து தங்களை ஜல்லிக்கட்டு காவலர்களாக காட்டிக் கொள்ள நினைக் கிறார் அண்ணாமலை.

2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒரு சட்டம் கொண்டு வந்திருந்தாலோ, அல்லது ஜல்லிக்கட்டுப் போட்டியை தடை செய்திருந்த உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முறையான வாதங்களை வைத்திருந் தாலோ 2017 மெரீனா புரட்சி போராட்டம் நடந்திருக்காதே!

ஒவ்வொரு ஆண்டும் அனுமதி தருகிறோம் என்ற பெயரால் நாடகம் ஆடியது பா.ஜ.க. அரசு. அதே நேரத்தில் இந்திய விலங்கு கள் நல ஆணையத்தை வைத்து முடிந்தவரைக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு முட்டுக்கட்டையும் போட்டது. தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய தமிழ் நாட்டிலும், சேவல் சண்டை நடத்திய ஆந்திராவிலும், ஆட்சியை கலைத்துவிட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என இந்திய விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினரும், வழக்கறிஞருமான என்.ஜி.ஜெய சிம்ஹ, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு கடிதம் எழுதியதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

ஜல்லிக்கட்டு.. ”அண்ணாமலையின்  அண்டப்புளுகு ஆகாசப்புளுகு” : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறி மாநில அரசுகள் செயல்படுவது நமது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை எனவும். தமிழ்நாடு, ஆந் திர அரசுகளின் மீது அரசியல் சாசனத்தில் 365 பிரிவு சட்டத்தைப் பயன் படுத்தி, ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் 2017 ஆம் ஆண்டு அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டது யாருடைய குரல்?

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சென்னைக் கடற்கரையில் போராடிக் கொண்டு இருந்தபோது கைகட்டி வேடிக்கை பார்த்தது ஒன் றிய பா.ஜ.க. அரசு. ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதித்து அவசர சட்டத்தை இயற்றுங்கள் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசை தான் தமிழர் கள் வலியுறுத்தினார்கள். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நெருங்கி வருகிறது. அதற்குள் முடிவெடுங்கள் என்று கேட்டார்கள். அப்போது ஒன்றிய சுற்றுச் சூழல் அமைச்சர் அனில் மாதவ் அவர்களி டம் நிருபர்கள் கேட்டார்கள். 'ஒன்றிய அரசு அவசர சட்டத்தை நிறை வேற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் கோரிக்கை வைக்கிறார் களே? எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அப்போது, 'எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன' என்று சொன்னவர்தான் பா.ஜ.க. அமைச்சர்.

“இந்தவழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. வழக்குநீதிமன்றத்தில் இருக்கும் போது எங்களால் எதுவும் செய்ய முடியாது" என்று சொன்னார் பா.ஜ.க. அமைச்சர்.

“ஜல்லிக்கட்டு விஷயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?" என்று நிரு பர்கள் கேட்டார்கள். “இன்றோ. நாளையோ தீர்ப்பு வெளியானதும் எங் களது நிலைப்பாட்டை அறிவிப்போம்” என்று சொன்னவர்தான் பா.ஜ.க. அமைச்சர். தீர்ப்பு வெளியான பிறகு இவர் நிலைப்பாட்டை அறிவித்தால் என்ன. அறிவிக்காமல் போனால் என்ன? 'ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒன்றிய அரசும் இருக்கிறது' என்பதை உச்சநீதிமன்றத்தில் முன் வந்து சொன்னால்தானே அது பா.ஜ.க.வின் உறுதியான நிலைப்பாடாக இருக்க முடியும்? இருந்திருக்க முடியும்?

இப்போது உச்சநீதிமன்றம் ஆதரித்து தீர்ப்பளித்து விட்டதும் வேறு வழியில்லாமல் ஆதரித்தாக வேண்டிய நெருக்கடி பா.ஜ.க.வுக்கு வந்து விட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டை முடிந்த வரை எதிர்த்து பார்த்தார்கள். 27 சதவிகிதமோ, 50 சதவிகிதமோ எதையும் தர முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் முதலில் வாதிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு. எதிர்ப்புகள் வந்ததும் பணிந்தது பா.ஜ.க. அரசு. உச்சநீதிமன்றம் அதற்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப் போகிறது என்றதும் ஆதரித்து விட்டார்கள். இப்படித்தான் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதிலும் பா.ஜ.க. நிலைப்பாடு ஆகும்.

banner

Related Stories

Related Stories