முரசொலி தலையங்கம்

’பப்பு’ என்று சொன்ன ராகுல் காந்தியை பார்த்து பயந்து நடுங்கும் பா.ஜ.க : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!

உள்ளூரை விட வெளிநாட்டில் தனது இமேஜ்க்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார் பிரதமர் மோடி.

’பப்பு’ என்று சொன்ன ராகுல் காந்தியை பார்த்து பயந்து நடுங்கும் பா.ஜ.க : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (28-03-2023)

ராகுல் குறிவைக்கப்படுவது ஏன்? 2

"நான் எனக்காகவோ, காங்கிரசு கட்சிக்காகவோ. காங்கிரசின் வளர்ச்சிக்காகவோ இந்தப் பயணத்தை மேற்கொள்ளவில்லை. நாட்டு மக்களின் வாழ்வில் வளம் பெருக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பயணத்தை மேற்கொண்டேன்" என்று சொல்லி நடந்து சென்றார். கட்சி எல்லைகளைத் தாண்டி பொதுமக்கள் - குறிப்பாக இளைஞர்கள் மத்தி யில் ராகுலுக்கு இது செல்வாக்கை உயர்த்தியது. எல்லா ஊர்களிலும் அவருக்கு திரண்ட கூட்டத்தைப் பார்த்து, 'கொரோனா பரவுகிறது' என்று வதந்தியைக் கிளப்பி ஊரடங்கு போடப் பார்த்தது பா.ஜ.க. காஷ்மீருக்குள் ராகுல் நடக்கத் தடை போட்டார்கள். காஷ்மீரில் அவருக்கு பாதுகாப்பே தரவில்லை. காங்கிரஸை எதிர்க்கும் கட்சிகள் கூட, பா.ஜ.க.வின் இந்த செயல்பாட்டை கண்டித்தார்கள். அதன்பிறகு அனுமதி கிடைத்தது. 13 கட்சித் தலைவர்கள் காஷ்மீரில் கூடினார்கள்.

‘பப்பு' என்று சொல்லி ராகுலை சிறுமைப்படுத்த நினைத்தது பா.ஜ.க. இந்த பயணத்துக்குப் பிறகுதான் பயப்படத் தொடங்கியது.

* உள்ளூரை விட வெளிநாட்டில் தனது இமேஜ்க்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார் பிரதமர் மோடி. எனவே அவருக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியது இலண்டனில் ராகுல் அளித்த பேட்டி.

’பப்பு’ என்று சொன்ன ராகுல் காந்தியை பார்த்து பயந்து நடுங்கும் பா.ஜ.க : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!

“இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது கடினம். இந்தியாவில் அரசியல் தலைவர்களே ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப் படுகிறார்கள். என்னுடைய செல்போனில் பெகாசஸ் உளவு மென்பொருளை நிறுவியிருக்கிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பி னர்களை பேச அனுமதிப்பது இல்லை. விவாதங்கள் நடத்த அனுமதிப்பது இல்லை” என்று ராகுல் பேசினார். “இந்தியாவின் சுதந்திர அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸும், பா.ஜ.க.வும் ஊடுருவிவிட்டன. அவர்கள் இந்த நிறுவ னங்களை தங்களது வசதிக்கு ஏற்ப மாற்றிவிட்டார்கள். பா.ஜ.க.வை யாராலும் வெல்ல முடியாது என்று நினைகிறார்கள். இது தவறு. இது ஊட கங்களால் பரப்பப்படும் பொய்யாகும்” என்று சொன்னார். வெளிநாட்டில் போய் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை கிழித்தார் ராகுல்.

குஜராத் கலவரம் குறித்த பி.பி.சி. ஆவணப்படம் வெளியானது. அதானியின் மோசடிகள் குறித்து அமெரிக்க நிறுவனம் அம்பலப்படுத்தி யது என உலகின் மிக முக்கிய இரண்டு நாடுகளின் குற்றச்சாட்டுகள் வந்த வேளையில் ராகுலின் பேட்டி வந்தது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக அமைந்தது.

* இறுதியாக அதானி விவகாரத்தில் ராகுல் பேசியது ஆகும். 'மிஸ்டர் க்ளீன்' என்று ஒரு இமேஜை கட்டமைத்து வைத்திருந்தார்கள் மோடிக்கு. அதனை நொறுக்கினார் ராகுல்.

"2014 ஆம் ஆண்டு 8 பில்லியன் டாலராக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இப்போது 140 பில்லியன் டாலராக ஆனது எப்படி? 2014 ஆம் ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 609 ஆவது இடத்தில் இருந்தவர், 2022 ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தை பிடித்தது எப் படி? விமான நிலையம் என்றாலும் அதானிதான். துறைமுகம் என்றாலும் அதானிதான். இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் அதானி தான். அவர் எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் நஷ்டம் அடைவது இல்லையே எப்படி? என்னைச் சந்திக்கும் மக்கள் அனைவரும் அதா னிக்கும் பிரதமருக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார்கள். இவர்கள் இருவருக்குமான உறவு குஜராத் முதலமைச்சராக மோடி இருக்கும் காலத்தில் இருந்து தொடர்கிறது.

’பப்பு’ என்று சொன்ன ராகுல் காந்தியை பார்த்து பயந்து நடுங்கும் பா.ஜ.க : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!

முன் அனுபவம் இல்லாதவர்கள் விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்ள இயலாது என்ற விதியைத் திருத்தினார்கள். அதானிக்கு 6 விமான நிலையங்கள் தரப்பட்டன. இஸ்ரேலுக்கு பிரதமர் செல்கிறார். அவருக்குப் பின்னாலேயே நடந்து அதானி செல்கிறார். உடனே இஸ் ரேல் இந்தியா இடையிலான அனைத்து தொழில்துறை ஒப்பந்தங்களும் அதானிக்கு வந்து விடுகிறது. இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் செல்கிறார். உடனே மாயமந்திரமாக எஸ்.பி.ஐ. வங்கி அதானிக்கு 1 பில் லியன் டாலர் கடன் வழங்குகிறது. வங்கதேசத்திற்கு மோடி முதல் முறை யாகச் செல்கிறார். அங்கு மின் விநியோகத்திற்கான திட்டம் முடிவாகிறது. சில நாட்களுக்குப் பின் வங்கதேசத்தின் மின்வாரியம் 25 ஆண்டுகளுக்கு மின் விநியோக உரிமையை அதானிக்கு வழங்குகிறது. 1500 மெகா வாட் மின்சார ஒப்பந்தம் அதானிக்கு கிடைக்கிறது. அங்கிருந்து இலங்கை செல்கிறார்.

ஜூன் 2022ல் இலங்கை காற்றாலை மின்உற்பத்தி உரிமத்தை அதானிக்கு வழங்க வேண்டும் என மோடி அழுத்தம் கொடுப்பதாக ராஜபக்சே சொன் னார். இதுதான் உங்கள் வெளியுறவுக் கொள்கை. இது இந்திய வெளி யுறவுக் கொள்கை அல்ல. அதானியின் வெளியுறவுக்கொள்கை” – என்று குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக வைத்து வருகிறார் ராகுல்காந்தி. அதனால் தான் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வுக்கு ஜாதிப்பல்லக்கு தூக்கும் ‘தினமலர்' பத்திரிகை கூட - 25.3.2023 தேதியிட்ட தனது இதழில், "சமீப காலமாக, ஒன்றிய அரசை விமர்சிப்பவர்கள், அவர்களது உறவினர்கள் எல்லாம். சி.பி.ஐ., அமலாக் கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளின் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்" என்று பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டு எழுதி இருக்கிறது.

“அதானிக்கு வந்த 20 ஆயிரம் கோடி ரூபாய் யாருடைய பணம்?" என்பதை திரும்பத் திரும்ப ராகுல் கேட்கிறார். இந்தியாவில் கடைக்கோடி மனிதரையும் இது தொட்டுவிட்டது. அந்த ஆத்திரத்தைத்தான் பதவி பறிப்பு மூலமாக காட்டி இருக்கிறது பா.ஜ.க.. ராகுலுக்கு நன்மையே செய்துள்ளார்கள். எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை ஏற்படுத்த இதுவே பசையாகப்பயன்பட்டு இருக்கிறது.

banner

Related Stories

Related Stories