முரசொலி தலையங்கம்

“அனைவரும் படிக்கக் கூடாது என்பது ஆரிய மாடல்.. அனைவரும் படிக்க வேண்டும் என்பது திராவிட மாடல்” - முரசொலி!

திராவிட இயக்கத்தின் தோற்றத்துக்கு மிக அடிப்படையாக அமைந்தது நீதிக்கட்சியின் தோற்றத்துக்கும் இதுதான் அடிப்படை. இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்கும் இதுதான் அடிப்படை

“அனைவரும் படிக்கக் கூடாது என்பது ஆரிய மாடல்.. அனைவரும் படிக்க வேண்டும்  என்பது திராவிட மாடல்” - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நம்ம பள்ளி.. நம்ம அரசு!

'நம்ம ஊர் பள்ளி' என்ற மகத்தான திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். சமூக சேவை எண்ணம் கொண்டவர்களின் முயற்சியையும் இணைத்துக் கொண்டு அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும். இதன் மூலமாக தனியார் பள்ளிகளுக்கு இணையானதாக அரசுப் பள்ளிகள் உயரும் என்பதில் ஐயமில்லை!

"உள்ளூர் மக்களுடன் முன்னாள் மாணவர்களும், தொழில் முனைவோரும், உலகமெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களும் கைகோர்ப்பதற்காகவும் 'நம்ம ஊர் பள்ளி' அடித்தளம் இடுகிறது. நீங்கள் செலுத்தும் ஒரு ரூபாய் நன்கொடையும் கூட கூடுதல் வெளிப்படைத்தன்மையுடனும், கடமையுணர்வுடனும், நம் பள்ளிகள், நம் ஆசிரியர்கள், நம் குழந்தைகளின் வளர்ச்சிக்கென செலவிடப்படும்.

“அனைவரும் படிக்கக் கூடாது என்பது ஆரிய மாடல்.. அனைவரும் படிக்க வேண்டும்  என்பது திராவிட மாடல்” - முரசொலி!

இது அரசுக்கும் உங்களுக்குமான நீடித்த உறவாக இருக்கும் என உறுதி கூறுகிறேன். உங்களுடைய சி.எஸ்.ஆர். நிதி அறிவுப்பூர்வமான முறையில் செலவிடப்படுவதை உறுதி செய்யுங்கள். எங்கள் தரப்பிலிருந்து உங்கள் பங்களிப்பை தமிழ்நாட்டுக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அறிவுப்பூர்வமாகவும், பொறுப்புடனும் பயன்படுத்துவோம் என உறுதி அளிக்கிறேன்" என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

"நீங்கள் உலகின் எந்த மூலையில் வசித்தாலும் தமிழ்நாட்டிலும் உங்கள் சொந்த ஊரிலும் உங்கள் வேர்கள் வலுப்பட வேண்டும். உங்களை வளர்த்த உங்கள் மண்ணுக்கு நீங்கள் திருப்பிச் செய்வதற்கு ஒரு வாய்ப்பு, 'நம்ம ஸ்கூல்' வாயிலாகக் கிடைக்கிறது.

இன்றைய குழந்தைகள் வளர்ந்து உங்கள் நிறுவனங்களையும் பெருநிறுவனங்களையும், தமிழ் நாட்டின் கிராமங்களையும், நகரங்களையும் முன்னேற்றுவார்கள்; அவர்கள் நம் வளத்தையும், நம்பிக்கையையும் திட்டங்களையும் வளர்த்தெடுப்பார்கள்" என்றும் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

“அனைவரும் படிக்கக் கூடாது என்பது ஆரிய மாடல்.. அனைவரும் படிக்க வேண்டும்  என்பது திராவிட மாடல்” - முரசொலி!

தொழில் அதிபர் வேணு சீனிவாசன் அவர்களும், செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாத் ஆனந்த் அவர்களும் இதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கிய முதல் நாளே ஐம்பது கோடி ரூபாய் சேர்ந்துவிட்டது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தது முதல் பள்ளிக் கல்வித் துறையானது எத்தனையோ மகத்தான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.

« காலை உணவுத் திட்டம்

« இல்லம் தேடிக் கல்வி

« நான் முதல்வன்

« பள்ளி மேலாண்மைக் குழுக்கள்

« பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி

« சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி

« 1 முதல் 3 வகுப்பு வரையிலான மாணவர்க்கு எண்ணும் எழுத்தும் இயக்கம்

« பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள்

« 9 முதல் 12 வரையிலான மாணவர்க்கு வினாடி வினா போட்டிகள்

« மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி

« ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம்

« கணித ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி

« உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள்

« வகுப்பறை உற்றுநோக்கு செயலி

« வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு

« முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்

« இளந்தளிர் இலக்கியத் திட்டம்

« வயது வந்தோருக்கான கற்போம் - எழுதுவோம் திட்டம்

« கல்வி தொடர்பான தரவுகள் கொண்ட கையேடு தரப்பட்டுள்ளது.

« மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி வழங்கப்பட்டுள்ளது.

“அனைவரும் படிக்கக் கூடாது என்பது ஆரிய மாடல்.. அனைவரும் படிக்க வேண்டும்  என்பது திராவிட மாடல்” - முரசொலி!

- இப்படி எத்தனையோ மகத்தான முன்னெடுப்புகளைச் செய்துள்ளது கல்வித்துறை. இந்த வரிசையில் பேராசிரியர் அன்பழகனார் பெயரிலான திட்டப்படி ரூ.7000 கோடி மதிப்பீட்டில் அரசுப் பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் திட்டயிட்டுள்ளார்கள். முதல் கட்டமாக இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தாலும் ஆற்ற வேண்டிய பணிகள் என்பது ஏராளமாக இருக்கிறது. அதனால்தான் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க முதலமைச்சர் அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.

எப்படியாவது அரசுப் பள்ளிகளை முன்னேற்றி, மாணவர்களுக்கு வசதி செய்து தர வேண்டும் என்ற முதலமைச்சர் அவர்களின் தணியாத தாகம்தான் இதன் மூலமாக வெளிப்படுகிறது. 'நிதி நிலைமை சரியில்லையே' என்று காரணம் சொல்லிக் கொண்டு இருப்பதை விட, காரியத்தை எப்படியாவது செய்தாக வேண்டும் என்ற முதலமைச்சரின் முனைப்பே இதன் மூலமாகத் தெரிகிறது.

“அனைவரும் படிக்கக் கூடாது என்பது ஆரிய மாடல்.. அனைவரும் படிக்க வேண்டும்  என்பது திராவிட மாடல்” - முரசொலி!

மாணவர்களை படிக்க அனுப்பாமல், வேலைக்கு அனுப்புவதை அன்றைய முதலமைச்சர் காமராசர் அவர்கள் ஆய்வு செய்தார்கள். 'சாப்பாட்டுக்கு வழியில்லை, அதனால் வேலைக்கு அனுப்புகிறார்கள்' என்ற தகவல் கிடைத்தது. உடனடியாக சாப்பாடு போட மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதற்கான நிதி இல்லையே என்ற போது, பொதுமக்களிடமே நிதி திரட்டினார். அதேபோலத்தான் இன்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இறங்கி இருக்கிறார். 'நேற்று காமராசர் - இன்று மு.க.ஸ்டாலின்' என்று 'தினத்தந்தி' தலையங்கம் தீட்டுவது இதனால்தான். எடுத்த காரியம் சரியாக இருந்தால் அதனை எப்படியாவது நிறைவேற்றிக் காட்டுவதுதான் இன்றைய முதலமைச்சர் அவர்களின் பாணியாக இருக்கிறது.

"கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து' என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார்கள். அத்தகைய சொத்தை ஒவ்வொரு மாணவனுக்கும் உருவாக்கித் தருவதை தனது வாழ்க்கைக் கடமையாக முதலமைச்சர் அவர்கள் நினைக்கிறார்கள்..

திராவிட இயக்கத்தின் தோற்றத்துக்கு மிக அடிப்படையாக அமைந்தது 'அனைவர்க்கும் கல்வி' என்பதுதான். 'அனைவரும் படிக்கக் கூடாது' என்பது ஆரிய மாடல் என்றால், 'அனைவரும் படிக்க வேண்டும்' என்பது திராவிட மாடல் ஆகும். நீதிக்கட்சியின் தோற்றத்துக்கும் இதுதான் அடிப்படை. இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்கும் இதுதான் அடிப்படை

banner

Related Stories

Related Stories