முரசொலி தலையங்கம்

“உதவாக்கரை பழனிசாமி ஆட்சிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குமான வித்தியாசம் இதுதான்” : முரசொலி!

அதிகபட்சம் 2 மணி நேரத்திற்குள் அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் வெளியேறியதை செய்தியாளர்களின் கள ஆய்வுகளில் தெரியவந்தது.

“உதவாக்கரை பழனிசாமி ஆட்சிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குமான வித்தியாசம் இதுதான்” : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அன்றும் இன்றும்

அ.தி.மு.க. ஆட்சியில் மழைக் காலத்தில் வெள்ளக்காடாக மிதந்தது சென்னை. ஆனால் இன்று மழை பெய்த வேகத்தில் தண்ணீர் வெளியேறி மக்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கக் கூடியதாக செயல்படுத்திக் காட்டி இருக்கிறது தி.மு.க. ஆட்சி! மனச்சாட்சியுள்ள ஊடகங்களாக எழுதும், காட்சிப்படுத்தும் ஊடகங்கள் இதனை ஒப்புக் கொண்டு வெளிப்படையான பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றன.

வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகம் முழுக்க மழை பெய்து வருகிறது. பெரும்பாலும் மழை நீர் எங்கும் தேங்கவில்லை. வந்த வேகத்தில் போய்விட்டது. நிர்வாக இயந்திரம் அதனை அப்புறப்படுத்தி வருகிறது.

“உதவாக்கரை பழனிசாமி ஆட்சிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குமான வித்தியாசம் இதுதான்” : முரசொலி!

20 ஆயிரம் மாநகராட்சிப் பணியாளர்கள் களத்தில் பணியாற்றி வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 15 மண்டலங்களில் 200 வார்டுகளில் 20 ஆயிரம் பணியாளர்கள் மழை நீர் தேங்காமலும், வழக்கமான பணிகள் பாதிக்காமல் இருக்கவும் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த ஆண்டு மழையின் போது 500க்கும் மேற்பட்ட இடங்களில் மோட்டார் பம்புகள் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த முறை 420 இடங்களில் மோட்டார் பம்புகள் வைக்கப்பட்டுள்ளது எனவும் அதில் 56 பம்புகள் மட்டுமே தற்போது வரை இயக்கப்பட்டுள்ளதாகவும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிகால் வழியாக வெளியேறி வருவதால் அதிக அளவில் பம்புகள் தேவைப்படவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் இரண்டு இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி உள்ளது.

“உதவாக்கரை பழனிசாமி ஆட்சிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குமான வித்தியாசம் இதுதான்” : முரசொலி!

எந்தப் பகுதியிலும் மின் தடை ஏற்படவில்லை என்பதையும் சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டுள்ளார்கள். எந்தளவுக்கு அரசு நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்பதற்கு இது உதாரணம் ஆகும். கடந்த முறை பா.ஜ.க. அண்ணாமலை படகுப் பயணம் செய்த இடத்தில், இந்த முறை ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. பல பத்திரிகையாளர்கள் தனிப்பட்ட முறையில் அன்றும் இன்றும் என்று ஒப்பிட்டு இணைய தளங்களில் தங்களது பதிவுகளைப் போட்டு வருகிறார்கள்.

‘‘சென்னையில் தொடர்ச்சியாக மழைப் பொழிவு இருந்தாலே, நிருபர்களை குறிப்பிட்ட சில பாய்ன்ட்டுகளுக்கு ஓடச்சொல்லி எடிட்டோரியலில் விரட்டுவதை பார்த்துள்ளேன். கேமரா மைக்கோடு ஓட்டேரி, புளியந்தோப்பு, வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் சுரங்கப் பாதை நோக்கி நம்பிக்கையோடு போகிற நிருபர்கள் ஏமாறுவது இல்லை. முழங்கால் வெள்ளம், மழைக் காலத்தில் அங்கே எப்போதும் இருப்பதுதான் காரணம்.

“உதவாக்கரை பழனிசாமி ஆட்சிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குமான வித்தியாசம் இதுதான்” : முரசொலி!

அதே போல்தான் திருவொற்றியூர் ரயில்வே சுரங்கப் பாதையும். நேற்று (1.11.2022) அந்தக் காட்சிகள் எதுவும் நெடுநேரம் நீடிக்க வில்லை! காலையில் முதல் ஷாட் -சூட் வரை வெள்ளக்காட்சி கிடைத்திருக்கும். மெகா சைஸ் மோட்டார்கள் வைத்து மாநகராட்சியினர் வெள்ள நீரை உடனுக்குடன் வெளியேற்றியதை பார்க்க முடிந்தது.

அரங்கநாதன் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப் பாதை, ரிசர்வ் பேங்க் சுரங்கப் பாதை என வெள்ளம் தேங்கி நிற்பதில் புகழ்பெற்ற சுரங்கப் பாதைகளில் வெள்ளநீர் நீடித்து நிற்கவில்லை. வெள்ளம் தேங்கி நிற்கவில்லை என்பதையும் செய்தியாக்கலாம். போனவாரம் வரை வடசென்னையில் பல பகுதிகளில் கண்ட இடங்களில் பள்ளம் தோண்டிக் கிடந்தது.

“உதவாக்கரை பழனிசாமி ஆட்சிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குமான வித்தியாசம் இதுதான்” : முரசொலி!

கேட்டால் மெட்ரோ வேலை என்றனர், மி.வா. பணி என்றனர், மழைநீர்க்கால்வாய் வேலை நடக்கிறது என்றனர், மழை ஆரம்பித்ததும் கொஞ்சம் பதறித்தான் போனேன், சென்னை என்னாகுமோ என்று... நல்வாய்ப்பாக அப்படி ஏதும் நடந்து விடவில்லை.

மின்வாரிய ஊழியர்களும் மாநகராட்சி ஊழியர்களும் முழு வேகத்தோடு ஏரியாவில் பறந்து பறந்து வேலை பார்ப்பது சிறப்பும் வியப்பும். இன்னும் நான்கு நாட்களுக்குத் தொடரப்போகும் மழைக்கும் இதே போல் அவர்களின் சர்வீஸ் இருக்கும் என்று நம்புவோம்” (முகநூலில் ந.பா.சேதுராமன் 02.11.2022) என்று எழுதி இருக்கிறார் அந்த பத்திரிகையாளர்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டதால், கடந்தாண்டைப்போல் இந்தாண்டு சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை என “தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு” பாராட்டியுள்ளது.

“உதவாக்கரை பழனிசாமி ஆட்சிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குமான வித்தியாசம் இதுதான்” : முரசொலி!

அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், இந்த ஆண்டு பருவமழையின் முதல் நாள் எதிர்பார்த்தது போலவே தீவிரமாக இருந்ததாகவும், ஆனால் சென்னையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் காரணமாக 24 மணி நேர இடைவிடாத கனமழையால் பாதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சம் 2 மணி நேரத்திற்குள் அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் வெளியேறியதை செய்தியாளர்களின் கள ஆய்வுகளில் தெரியவந்ததாகவும், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே இதற்கு காரணம் என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவமழையை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 163 இடங்களில் உணவுடன் கூடிய சிறப்பு முகாம்களை சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ளது இக்கட்டுரை.

“உதவாக்கரை பழனிசாமி ஆட்சிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குமான வித்தியாசம் இதுதான்” : முரசொலி!

இதேபோல், சென்னை மாநகராட்சி மேற்கொண்ட வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை ‘தி இந்து’ நாளிதழும் பாராட்டி உள்ளது. பருவமழையின் போது, வழக்கமாக தண்ணீர் தேங்கும் சாலைகள் இம்முறை பாதிக்கப்படவில்லை என்றும் ‘தி இந்து’ தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால் தியாகராயர் நகர், மேற்கு மாம்பலம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள ‘தி இந்து’, நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கியதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு என்றும் தெரிவித்துள்ளது.

எழும்பூர் ரயில்வே பாதைகளில் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுத்துள்ள சென்னை மாநகராட்சியை தெற்கு ரயில்வே கோட்டம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. ‘நம்ம சென்னையா இது - அன்று இன்று’ என்று எடுத்துப் போட்டு செய்தி ஆக்கி உள்ளது ‘தந்தி டி.வி.’ வடிகால் பணிகள் முடிந்த இடங்களில் எங்கும் தண்ணீர் நிற்கவில்லை. வடிகால் பணிகள் நடந்து வரும் இடங்களில் தேங்கும் தண்ணீர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. ஆட்சிக்கும் தி.மு.க. ஆட்சிக்குமான வித்தியாசம் என்பது இதுதான்! ‘உதவாக்கரை’ பழனிசாமி ஆட்சிக்கும் ‘உழைப்பு’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சிக்குமான வித்தியாசம் இதுதான்!

banner

Related Stories

Related Stories