முரசொலி தலையங்கம்

65.10 கோடி மதிப்பீட்டில் 4,061 கி.மீ தூரம் தூர்வாரும் பணி தீவிரம்.. நீர்வளம் பாதுகாக்கும் தமிழ்நாடு அரசு!

உணவு உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைக்கும் என்பதை பெருமையுடன் உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

65.10 கோடி மதிப்பீட்டில் 4,061 கி.மீ தூரம் தூர்வாரும் பணி தீவிரம்.. நீர்வளம் பாதுகாக்கும் தமிழ்நாடு அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்துவிட்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘தமிழ்நாடு உணவு உற்பத்தியில் சாதனை படைக்கும்’ என்பதைச் சொல்லி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு இத்தகைய இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கி இருப்பது பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர் தொழுதுண்டு பின்செல்பவர் - என்கிறது வள்ளுவம். உழுதுண்டு வாழ்பவர்களின் ஏக்கம் போக்கும் அரசாக கழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மார்ச் 7ம் தேதி திருச்சியில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் இன்றைய முதல்வர் ஏழு உறுதிமொழிகளை நாட்டு மக்களுக்கு வழங்கினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமையும் போது ஏழு மிக முக்கியமான இலக்குகளைக் கொண்டதாக அது அமையும் என்று சொன்னார்.

அதில் மிக முக்கியமானது வேளாண்மையும் நீர்வளமும் ஆகும். மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி! - என்பது அவருடைய முக்கியமான இலக்காக அறிவிக்கப்பட்டது. குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர் என்பதையும் தனது இலக்காகச் சொன்னார். இந்த இலக்குகளை பத்து ஆண்டுகளுக்குள் அடைவோம் என்றும் சொல்லி இருந்தார். அந்த திட்டமிடுதலைத் தொடங்கி இருக்கிறார். “தமிழ்நாட்டின் நிகர பயிரிடு பரப்பு இப்போது 60 விழுக்காடாக இருக்கிறது. இதனை 75 விழுக்காடாக உயர்த்தும் இலக்கை பத்தாண்டுகளுக்குள் எட்ட இருக்கிறோம்” என்று சொன்னார். தி.மு.க. தலைவராக எதைச்சொன்னாரோ, அதையே முதலமைச்சராக ஆன பிறகும் திட்டமிட்டு வருகிறார்.

65.10 கோடி மதிப்பீட்டில் 4,061 கி.மீ தூரம் தூர்வாரும் பணி தீவிரம்.. நீர்வளம் பாதுகாக்கும் தமிழ்நாடு அரசு!

விவசாயிகள் எதிர்பார்ப்பது இரண்டு தான். ஒன்று தேவையான நீர் வளம். அந்த நீர் கடைமடை வரை வந்து சேர்வதற்கான நீர்வழிப்பாதைகள் சீரமைக்கப்பட்ட வேண்டும். இவை இரண்டிலும் கழக அரசு அக்கறை செலுத்தத் தொடங்கி இருப்பதை நேற்றைய தினம் நடந்த இரண்டு காட்சிகள் உணர்த்தியது.

மேட்டூர் அணையில் தண்ணீரைத் திறந்து விடுவதற்கு முன்னால் காவிரி டெல்டாவில் தூர்வாரக் கூடிய பணிகளைப் பார்வையிட்டார்கள். தண்ணீர் திறந்து விடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அந்த தண்ணீர் கடைமடை வரை போய்ச்சேர்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அந்தக் கண்காணிப்பை முதலமைச்சர் செய்துள்ளார்.

மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டுக் கான தண்ணீர் மிகச் சரியாக ஜூன் 12 அன்று முதலமைச்சரால் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த 3 ஆம் தேதி அன்று முதலமைச்சர் செய்தார்கள். இன்றைய நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 96.8 அடியாகவும், நீர் இருப்பு 60.784 டி.எம்.சி.யாகவும் நீர்வரத்து 1439 கன அடியாகவும் இருந்தது. 5.21 இலட்சம் ஏக்கர் நிலம் குறுவைச் சாகுபடிக்கு தயாராக இருக்கிறது. இதற்கு சுமார் 125.00 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மிகச் சரியாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதா என்றால் இல்லை. ஒரே ஒரு ஆண்டு மட்டும்தான் அதாவது கடந்த ஆண்டு மட்டும் தான் ஜூன் 12 அன்று திறந்துள்ளார்கள். செப்டம்பர் 17, ஆகஸ்ட் 2, ஆகஸ்ட் 10, ஆகஸ்ட் 9, செப்டம்பர் 20, அக்டோபர் 2, ஜூலை 19, ஆகஸ்ட் 13 - என 2012ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தங்கள் விருப்பப்படி விவசாயிகளைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல்தான் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளார்கள்.

65.10 கோடி மதிப்பீட்டில் 4,061 கி.மீ தூரம் தூர்வாரும் பணி தீவிரம்.. நீர்வளம் பாதுகாக்கும் தமிழ்நாடு அரசு!

பாசன விதித்தொகுப்பில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 53.80 அடியாகவும், கொள்ளளவு 20.டி.எம், சி.யாகவும், மேட்டூருக்கு நீர்வரத்து மற்றும் தென் மேற்கு பருவமழை நன்றாக இருந்தால் ஜூன் 12 அன்று தண்ணீர் திறந்து விடலாம் என்று இருக்கிறது. எனவேதான் விவசாயிகளின் நலனை மனதில் வைத்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கடைமடை வரை சென்று தண்ணீர் சேருவதற்கான தூர்வாரும் பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அதனையும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

* திருச்சி மாவட்டத்தில் 63 பணிகள் -

* கரூர் மாவட்டத்தில் 10பணிகள் -

* அரியலூர் மாவட்டத்தில் 33 பணிகள் -

* தஞ்சை மாவட்டத்தில் 185 பணிகள் -

* திருவாரூர் மாவட்டத்தில் 174 பணிகள் -

* நாகை மாவட்டத்தில் 89 பணிகள் -

* மயிலாடுதுறை மாவட்டத்துக்கு 26 பணிகள் -

* கடலூர் மாவட்டத்துக்கு 58 பணிகள் -

* புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 9 பணிகள் - என திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மொத்தம் 9 மாவட்டங்களில் 647 பணிகள் நடைபெற்று வருகின்றன. 65.10 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் தீட்டப்பட்டுள்ளது. இதன் மூலமாக 4061 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்பட்டு வருகிறது. “இந்த தூர்வாரும் பணியின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நீர்வளம் மேம்படும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி சாகுபடி இருக்கும். உணவு உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைக்கும் என்பதை பெருமையுடன் உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இப்போது நாங்கள் தொடங்கி இருப்பது முதல் கட்டப் பணிகள் தான். அடுத்த கட்டப் பணிகளும் படிப்படியாகத் தொடங்கப்படும்” என்றும் அறிவித்துள்ளார். நீர்வளமும் நிலவளமும் உள்ள நாட்டை அமைக்கும் முதலமைச்சரின் பயணம் தொடரட்டும்!

banner

Related Stories

Related Stories