”அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளில் மக்கள் நேரடியாக பங்கேற்க வேண்டும் என்பதுதான் ‘பஞ்சாயத்து ராஜ்’ சட்டத்தின் நோக்கமாக இருந்தது. அந்த சட்டத்தின் நோக்கத்தையே பஞ்சராக்கத் துணிந்துவிட்டது எடப்பாடி அரசு.
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்ற அவசரச் சட்டத்தை அ.தி.மு.க அரசு கொடுத்ததும், அன்றைய தினமே கையெழுத்திட்டுவிட்டார் ஆளுநர் பன்வாரிலால். ஆனால் 2018-ம் ஆண்டு அமைச்சரவை தீர்மானமாக அனுப்பிய 7-பேர் விடுதலை இன்னும் அப்படியே கிடக்கிறது. நீட் தேர்வை எதிர்த்து 2 முறை சட்டசபைத் தீர்மானம் போட்டு அனுப்பினோம், இரண்டு தீர்மானங்களையும் திருப்பி அனுப்பினார்கள். அதை மீண்டும் அமைச்சரவை, சட்டசபை தீர்மானம் போட்டு அனுப்ப எடப்பாடி அரசு முயற்சிக்கவில்லை.
எடப்பாடி அரசுக்கு எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது நன்கு தெரிந்திருக்கிறது. அதேபோல் ஆளுநருக்கு எதில் முதலில் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும் என்பதும் நன்கு தெரிந்துள்ளது. மக்களுக்கும் தெரியும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எடப்பாடி அரசுக்கு வாக்களிக்கக் கூடாது என்று” - முரசொலி நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது.