ஒரே நாடு ஒரே மொழி என்று சர்ச்சை கருத்தை வெளியிட்ட அமித்ஷா 4 நாட்களில் திரும்பப் பெற்றுள்ளார் என்றால், இடையில் என்ன நடந்தது?
ஜனநாயகத்திற்கும், பழம்பெரும் பன்முகத்தன்மைக்கும் பங்கம் விளைவிக்கும் அமித்ஷாவின் வார்த்தையைக் கேட்ட மறு நொடி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுக்கிறார், போரட்டத்தை அறிவிக்கிறார். ஆளுநர் மு.க.ஸ்டாலினை அழைத்துப் பேசுகிறார், பா.ஜ.க தரப்பின் விளக்கம் தி.மு.க தலைவருக்கு சொல்லப்படுகிறது.
அடுத்த நிமிடங்களில் அமித்ஷா தனது கருத்திலிருந்து பின்வாங்குகிறார் என்றால் இந்தி திணிப்பை தடுக்கும் வல்லமை தி.மு.கழகத்திற்கு, திராவிட இயக்கத்திற்கே உண்டு என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது.
அன்று ஜனநாயகம் பேசிய நேருவை பணிய வைப்பது கூட பெரிதல்ல, நித்தமும் சர்வாதிகார, எதேச்சதிகார நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பா.ஜ.க-வையே பணிய வைத்ததில் தான் தி.மு.க-வின் பலமும் மு.க.ஸ்டாலினின் கம்பீரமும் அடங்கியிருக்கிறது.