வடகிழக்கு மாநிலங்களின் 8 முதல்வர்கள் பங்கேற்ற 68-வது கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து 371 பிரிவு ரத்தாகாது எனக் கூறினார். அப்படியானால் காஷ்மீரில் மட்டும் 370 ரத்து செய்யப்பட்டது ஏன்?
காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட சிறப்பு அந்தஸ்து, வடகிழக்கு மாநிலங்களுக்கு என்று வருகிறபோது இங்கே அதை செய்யமாட்டோம், அதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று பேசுவது ஏன்? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.