இடஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல், நேரடி நியமனம் மூலம் பணிக்கு அமர்த்துவது, மத்திய அரசின் சமூக நீதிக்கு எதிரான செயல். அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற பணி நியமனங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது என முரசொலி நாளேடு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நேரடித் தேர்வு எனும் தந்திரம், பணி நியமனங்களில் முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் காரர்களை நுழைப்பதற்கான முயற்சி என்றும் முரசொலி குற்றம் சாட்டியுள்ளது.