மு.க.ஸ்டாலின்

அமெரிக்க அரசுமுறைப் பயணம் முடிந்து, சென்னை திரும்பினார் முதலமைச்சர்! - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

சென்னை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

அமெரிக்க அரசுமுறைப் பயணம் முடிந்து, சென்னை திரும்பினார் முதலமைச்சர்! - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு அரசின் தொழில்துறை முன்னெடுப்புகளுக்கு வழிகாட்டியாக நின்று, பல உலக முன்னணி நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை ஈர்த்து அமெரிக்காவிலிருந்து தமிழ்நாடு திரும்பியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சரின் 17 நாட்கள் அமெரிக்க பயணத்தின்போது முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூபாய் 7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

அமெரிக்க அரசுமுறைப் பயணம் முடிந்து, சென்னை திரும்பினார் முதலமைச்சர்! - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Google, Microsoft, Apple உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களும், தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் எண்ணத்தை விதைத்தார் முதலமைச்சர்.

இந்நிலையில், வெற்றிகரமாக தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை சிகாகோவில் இருந்து விமான மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை புறப்பட்டார்.

அவரை அமெரிக்க வாழ் தமிழர்கள் விமான நிலையம் வந்து உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories