“நான் முதல்வன்” மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) இணைந்து நடத்திய SCOUT திட்டத்தில் இங்கிலாந்தின் டர்ஹம் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று தாயகம் திரும்பிய 25 மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் சிலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர், அதன் விவரம்...
ஈரோடு, எம்.பி.நாச்சிமுத்து ஜெகன்நாதன் பொறியியில் கல்லூரியில் ECE துறையில், மூன்றாவது வருடம் படித்து வரும் மாணவி பேசியதாவது.
நான் அரசு பள்ளியில் படித்ததால், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் முழு பயனையும் அடைகிறேன். என்னுடைய பள்ளி வயது முதல் நான் பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்பது எனது கனவு. ஆனால், என்னுடைய வீட்டில் அந்த அளவுக்கு செலவு செய்து படிக்க வைக்க இயலாத சூழ்நிலை இருந்தது. நான் கலந்தாய்வுக்கு விண்ணபித்தேன். தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தின் மூலம் இலவசமாக படிக்க முடியும் என்பதால் தான் பொறியியல் படிப்பையே என்னால் தொடங்க முடிந்தது. இந்த பொறியியல் படிப்பு படிக்கும் போது சில கூடுதல் கோர்ஸ்களையும் படிக்க வேண்டியுள்ளது. அதேபோல் மூன்றாவது மற்றும் இறுதி ஆண்டுகளில் project செய்வதற்கும் செலவு செய்ய வேண்டும்.
நாங்கள் 1st Batch-ல் சேரும்போதே நீங்கள் ஏற்படுத்திக் கொடுத்த “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக நிறைய Value Added Course இலவசமாக கிடைத்தது. அதை நாங்கள் பயன்படுத்தி படிக்கும் போது எங்களுக்கு இன்னும் நன்மையாக இருந்தது. எங்கள் அறிவை வளர்த்துக்கொண்டோம். அதேபோல், இந்த ஊக்கத் தொகையை நான் மாதந்தோறும் பெறுவதால் அதை சேமித்து என்னுடைய 3வது வருடம்
Mini Project ஐ நிறைவு செய்ய முடிந்தது. இந்த அரசு பெண் கல்விக்காக செயல்படுத்தும் புதுமைப் பெண் திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மற்றொரு மாணவர் பேசும்போது – “நான் முதல்வன்” திட்டம் தொடங்கிய நாள் முதலே இதில் நான் பயனடைந்து வருகிறேன். IOT போன்ற பல்வேறு Technology Course படித்துக்கொண்டிருக்கிறேன். அதை செயல்படுத்த “நான் முதல்வன்” திட்டத்திலேயே என்னுடைய கல்லூரியில் job fair கொண்டுவந்தார்கள். இதில் கலந்து கொண்டு மூன்று நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் இந்த Scout Programme மூலமாக நான் UK சென்றதால் International Programme-க்கான Access கிடைத்துள்ளது. அங்கிருந்த International Professors, Researchers உடன் கலந்துரையாடியது மிகவும் உதவியாக இருந்தது. அவர்கள் அங்கு வந்து படிக்க வழிகாட்டினார்கள். இன்னும் உதவி செய்வதற்கு தயாராக உள்ளார்கள். இப்போது உள்ள International தொடர்பை வைத்து வெளிநாட்டில் வேலைக்கு எடுப்பவர்களுடன் நல்ல நட்பு உள்ளது. நான் இப்போது நேர்காணலுக்கு அணுகினால் என்னை consider செய்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால், வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.
முதலமைச்சர் அவர்கள் - ஆண்களுக்கு என்று “தமிழ் புதல்வன் திட்டம்” கொண்டுவரப் போகிறோம். அது பற்றி தெரியுமா?
ஆக்ஸ்ட் மாதம் முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறோம். எப்படி பெண்களுக்கு என புதுமைப் பெண் திட்டம் அறிவித்து செயல்படுத்தி வருகிறோமோ, அதேபோல், இந்த திட்டத்தில் ஊக்கத்தொகை கொடுக்க போகிறோம். இதையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பொறியியில் கல்லூரி இறுதி ஆண்டு BTech IT படிக்கும் மாணவர் பாலாஜி பேசியதாவது -
“நான் முதல்வன்” திட்டம் எனக்கு இரண்டாவது ஆண்டு முதல் தொடங்கினார்கள். நான் படித்தது augmented reality மற்றும் virtual reality. எனக்கு அப்போது அதில் விருப்பம் இல்லை. ஆனால், அந்த படிப்பு முடிந்த பிறகு, இப்படி ஒரு களம் இருக்கிறது, இதனால் என்னுடைய அறிவு வளர்ச்சியடையும் என்று நினைத்தேன். இந்த படிப்பு முடிந்த பிறகு நிறைய போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய hackathon-ல் வெற்றி பெற்றேன். கடைசியாக நடந்த Smart India hackathon-ல் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக கலந்துக் கொண்டு குழுவாக வெற்றிப் பெற்றோம். அதற்கு “நான் முதல்வன்” திட்டம், Machine Learning courses போன்றவை மிகவும் உதவியாக இருந்தது. அதேபோல் “நான் முதல்வன்” திட்டத்தில் நடத்தும் hackathons அனைத்தும் ஒரு Competitive Edge-யை உருவாக்கி ஒரு product எப்படி பில் செய்வது, ஸ்டார்ட்அப் எப்படி தொடங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது போன்றவற்றில் மிக மிக உதவியாக இருந்தது. இதேபோல தான் இங்கிலாந்திலும் ஒரு நாள் ஒரு Objective எடுத்து குழு, குழுவாகப் பிரித்து நீங்கள் செய்யுங்கள் என்றார்கள். அவர்கள் செய்வதும், நாம் செய்வதும் ஓரளவுக்கு ஒன்றாக இருந்தது. அதனால், நாங்கள் நிச்சயமாக அவர்களின் நிலைக்கு எட்டுவோம். இந்த வாய்ப்பு மிகவும் உதவியாக இருந்தது. இதனால், எங்களுடைய உடன் பிறந்தவர்களுக்கும் கற்றுக்கொடுத்து ஊக்கமளிக்க முடிகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் – “நான் முதல்வன்” திட்டத்தை இன்னும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு ஏதேனும் யோசனைகள் இருக்கிறதா? ஏதேனும், கருத்துகள் இருந்தால் கூறவும்?
மாணவர் பாலாஜி - ஏற்கனவே இருப்பது போல் இன்னும் அதிகமாக Hackathon நடத்தலாம். Competitions அதிகமாக நடத்த வேண்டும். மாணவர்களே படிப்புகளை தேர்வு செய்வது போல் இருந்தால் நன்றாக இருக்கும். Depth wise, Breath wise போகக் கூடிய சுதந்திரம் இருந்து ஒரு தொடர்ச்சி இருந்தால் beginner, advance and research ஆக அவர்கள் போகக் கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தால் நன்றாக இருக்கும்.
வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் Bsc (Physics) இறுதியாண்டு படிக்கும் மாணவி ரேணுகா பேசியதாவது –
“நான் முதல்வன்” திட்டம் நான் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது வந்தது. அதில் Microsoft Excel, Powerpoint போன்ற படிப்புகள் எல்லாம் இருந்தது. நான் +2வில் Bio Maths படித்தேன். கம்யூட்டர் பற்றிய அறிவு எனக்கு இல்லை. “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக தான் கம்யூட்டர் படிப்பு பற்றி நான் தெரிந்து கொண்டேன். Data Analytics Using TAB என்பது குறித்து எங்களுக்கு இறுதியாண்டில் பிராஜக்ட் கொடுத்திருந்தார்கள். Data Visualisation, எப்படி Bill பண்ண வேண்டும், எப்படி Interpret செய்ய வேண்டும் என்பது பற்றி கற்றுக் கொடுத்தார்கள். மேலும், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் EV Battery Management என்பது பற்றி Offline Course ஒன்று offer செய்திருந்தார்கள். இப்போது upcoming trend Electric Vehicle தான். அதைப்பற்றி எங்களுக்கு அவ்வளவாக தெரியாது. “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக தான் இதைப்பற்றி தெரிந்து கொண்டோம். திறன் மேம்பாட்டினை வளர்த்து கொண்டோம். இது எங்களுடைய Profile-யை உயர்த்தும். கண்டிப்பாக ஒரு பெரிய கம்பெனியில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற பெரிய நம்பிக்கை எங்களுக்கு கொடுத்திருக்கிறது.
“நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் SCOUT-ல் செலக்ட் ஆவதற்கு முன்பு இருந்த தன்னம்பிக்கையை விட தற்போது வெளிநாடு சென்று வந்த பிறகு என் தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது. அதனால் தான் நான் உங்கள் முன்பாக பேசுகிறேன்.
வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் மாணவர் யோகேஷ்வரன் பேசியதாவது
டர்ஹம் பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழுவாக அமைத்து Team Communication, Team building என்று modern approach ஆக இருக்கிறது. முதலில் நாங்கள் எப்படி செய்யப்போகிறோம் என்று பயந்துகொண்டு தான் இருந்தோம். ஆனால் நாங்கள் எல்லோரும் மிகவும் நன்றாகவே perform செய்தோம். அதற்கு காரணம் “நான் முதல்வன்” திட்டம் தான். “நான் முதல்வன்” திட்டம் Hybrid course ஆக இருக்கிறது. Theoritical course மற்றும் Hands-on experience ஆக இருக்கிறது. Indian educationக்கும் foreign educationக்கும் Bridge ஆக “நான் முதல்வன்” திட்டம் இருக்கிறது. இனிவரும் மாணவர்கள் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு கிடைத்தால் எளிதாக அவர்களால் அங்கே manage செய்து படிக்க முடியும்.
செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் என்ற மீனவ கிராமத்தைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிவகாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் மாணவி சுஜாதா பேசியதாவது –
நான் இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே திருமணமாகிவிட்டது. திருமணமாகி விட்டதால் உன்னால் முழுமையாக படிக்க முடியாது, இடையில் படிப்பை நிறுத்திவிடுவாய் என்று சொன்னார்கள். “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக இந்த மேடையில் நான் நிற்பது அவர்களின் கேள்விக்கு விடையாக இருக்கும்.
மாணவ, மாணவியர் அனைவரும் இந்த நல்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்களுக்கும், “நான் முதல்வன்” குழுவிற்கும், பிரிட்டிஷ் கவுன்சிலிக்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.