சரித்தர சாதனை படைத்து வரும் சாதனை தலைவர் முதலமைவ்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் 4 ஆம் ஆண்டு இன்று (மே 7) தொடங்குகிறது. மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை திரும்பிப் பார்க்கும் போது பிரம்பிப்பாக இருக்கிறது.
சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் என்றே கூற வேண்டும்.
முதல்வர் சிந்தனையில் உதித்திட்ட சீரிய திட்டங்கள் இன்றைக்கு இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் செயல்படுத்துவது மட்டுமின்றி வெளிநாடுகளிலும் செயல்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்றால் அது மிமையல்ல.
திராவிட மாடல் நாயகர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாண்டு காலம் நிறைவுற்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு முதல்வர் அவர்களை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி இந்திய திருநாட்டு மக்களே வாழ்த்தி மகிழ்கின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த கால அடிமை ஆட்சியாக ஒன்றிய அரசின் எடுபிடி ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருந்ததினால் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்தது. தமிழ் நாட்டு வேலைவாய்ப்புளில் தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காத சூழ்நிலையும் நிலவியது. வேலைவாய்ப்பு இல்லை, பொருளாதாரத்தில் மந்த நிலை, எங்கும் ஒரு அசாதாரணமான சூழ்நிலை நிலவியதால் இதிலிருந்து விடுபட தமிழ்நாட்டு மக்கள் எப்போது சட்டமன்றத் தேர்தல் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அதற்கு ஏற்றாற்போல் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அபரிமிதமான வாக்குகளை அள்ளித் தந்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.கவை ஆட்சி பீடத்தில் அமரவைத்தனர்.
கண் துஞ்சாமல் பணியாற்றும் முதல்வர்!
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு மே திங்கள் 7 ஆம் தேதி அன்று காலை "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்.." என்று கூறி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரையில் மக்கள் நலனே, தன்நலன், நாட்டு நலன் என்று கண் துஞ்சாமல் பணியாற்றி வருகிறார்.
அவரது ஒவ்வொரு சிந்தனையும் தமிழ் நாட்டில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் அவர்கள் மட்டுமின்றி அவர்களின் பிள்ளைகளும் சந்தோஷமாக வாழ வேண்டும். அவர்களின் பிள்ளைகள் படித்திட வேண்டும், அதற்கான கட்டமைப்பை உருவாக்கினால் மட்டும் போதாது, பிள்ளைகள் பள்ளி கல்லூரிகளில் சென்று படிப்பதற்கான வழிகாட்டுதல்களையும் உருவாக்கிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் சிறார்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இத்திட்டம் இன்றைக்கு இந்தியாவில் பிற மாநிலங்களும் பின்பற்றக் கூடிய திட்டமாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி கனடா நாட்டில் கூட இன்றைக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படத் தொடங்கி விட்டது.
மாணவிகள் பயன்பெற புதுமைப் பெண் திட்டம்!
பெண்கள் +2 வரை படித்தால்போதும் என்று கிராமப்புறங்களில் இன்றும் ஒரு நடைமுறை இருந்து வந்ததினை நாம் அறிவோம். ஆனால் இந்த திராவிட மாடல் அரசில் கல்லூரியில் பட்டம் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். இன்றைக்கு பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு கல்லூரிகளில் பட்டம் படிக்க விண்ணப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.
மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் படிப்பதற்காக கொடுத்த ஒரே முதல்வர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் என்று பெருமையுடன் மாணவிகள் சொல்லிக் கொண்டு வருகின்ற நிலை இன்றைக்கு தமிழ்நாட்டில் உருவாகிவிட்டது.
அதுமட்டுமின்றி இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் கல்லூரியில் படிக்கும் ஆண்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற தமிழ்ப் புதல்வன் திட்டம் படிக்கின்ற இளைஞர்கள் மனதிலும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாத வகையில் அமைந்திருக்கிறது.
முதலமைச்சரின் மனித நேயம்!
ஐ.ஏ.எஸ், ஐ.பிஎஸ் என்று சிவில் சர்வீஸ் தேர்வுக்கென்று உருவாக்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தால் கூலி வேலை செய்பவர்களின் மகன், மகள்கள் ஆட்சியாளர்களாகவும், போலிஸ் உயரதிகாரிகளாகவும் தேர்வாகும் போது, அக்கூலித் தொழிலாளிகள் அடையும் மகிழ்ச்சியை விட அவர்களின் பிள்ளைகள் அடையும் மகிழ்ச்சியை விட நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடையும் மகிழச்சியில்தான் அவரது மனித நேயம் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் திட்டம் கடந்த 2021 மே 7 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் திட்டங்கள்
மகளிர் வாழ்க்கை மேம்பட மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் திட்டமும் இன்றைக்கு தேசிய கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் இடம் பெறக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது.
விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி நகைக் கடன் தள்ளுபடி என்று திராவிட மாடல் அரசின் நாயகர் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த மூன்று ஆண்டு ஆட்சியில் நிறை வேற்றப்பட்ட எண்ணற்ற திட்டங்கள் இன்றைக்கு இந்தியா முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது கையெழுத்திட்ட 5 திட்டங்களையும் இந்த மூன்று ஆண்டு ஆட்சி நிறைவிலும் நம்மால் நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியாது.
பதவியேற்ற அன்றே கையெழுத்திட்ட திட்டங்கள்
அனைத்து மகளிரும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.
ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு.
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொரோனா உயர் சிகிச்சை கிடைக்க நடவடிக்கை.
கொரோனா நிவாரணமாக அனைத்து மக்களுக்கும் ரூபாய் நான்கு ஆயிரம் வழங்கல்.
பொதுமக்களின் மனுக்கள் மீது நூறு நாளில் தீர்வு காண்பதற்கென்று முதலமைச்சர் குறை தீர்க்கும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற தனித்துறை உருவாக்கம்.
- என்று ஐந்து முத்தான திட்டங்களுக்கு கையெழுத்திட்டு ஆட்சி தொடங்கிய மே 7 முதல் இன்று வரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒவ்வொரு கையெழுத்தும் ஒவ்வொரு மாணவரின் ஒவ்வொரு மாணவியரின் ஒவ்வொரு குடும்பத் தலைவரின், ஒவ்வொரு கடும்பத் தலைவியின் வாழ்க்கையை மேம்ப்டுத்தும் கையெழுத்துக்கள்தான். தமிழ்நாட்டினை இன்றைக்கு தொழில் துறையில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திடும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடே முதல்வரை வாழ்த்துகிறது
தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம் மட்டுமல்ல, இன்றைக்கு இந்திய திருநாட்டிலே ஒரு பாசிச ஆட்சியை அகற்றி ஒரு ஜனநாயக சம தர்ம ஆட்சியை நிலை நிறுத்திட அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசின் நாயகர் கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி மூன்றாண்டு நிறைவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நல் நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடே நன்றி தெரிவித்து போற்றி வாழ்த்துகிறது.