மு.க.ஸ்டாலின்

“கலைஞர் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் துணை நின்று பணியாற்றுவேன்” - பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் உறுதி!

“எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக, சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றினாரோ, அந்த வகையில் அவர் வழி நின்று நானும் என்னுடைய கடமையை ஆற்றுவேன்”

“கலைஞர் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் துணை நின்று பணியாற்றுவேன்” - பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும், கழக உடன்பிறப்புகளும், தி.மு.க தலைவர் அவர்களை, சென்னை – அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

தி.மு.க தலைவர் அவர்களுக்கு நேரில் வாழ்த்துத் தெரிவித்தவர்களின் விவரம் வருமாறு:

கி.வீரமணி, - தலைவர், திராவிடர் கழகம்

வைகோ எம்.பி., – மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

தொல்.திருமாவளவன் எம்.பி., – தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

நாராயணசாமி- முன்னாள் முதலமைச்சர், புதுச்சேரி

இரா.முத்தரசன் – மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் – பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

தி. வேல்முருகன் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி

இனிகோ இருதயராஜ் – கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்.

திருப்பூர் அல்தாப் – பொதுச்செயலாளர், தமிழ் மாநில தேசிய லீக்

பேராயர் ஏ.எம்.சின்னப்பா

பி.ஆர்.ராமன் மற்றும் பி.எஸ்.ராமன் – மூத்த வழக்கறிஞர்கள்

தொலைபேசியில் வாழ்த்தியவர்களின் விவரம் வருமாறு:

மன்மோகன் சிங் - முன்னாள் பிரதமர்

ராகுல் காந்தி எம்.பி. – இந்திய தேசிய காங்கிரஸ்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா

மல்லிகார்ஜுன கார்கே - காங்கிரஸ் மூத்த தலைவர்

தமிழக காங்கிரஸ் கமிட்டி மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

சிரோமணி அகாலிதள் கட்சித் தலைவர் நரேஷ் குஜரால்

எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன்

கே.எஸ்.அழகிரி – தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். பாலகிருஷ்ணன்

தோழர்.ஆர். நல்லகண்ணு - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்

கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன்

தவத்திரு. குன்றக்குடி அடிகளார்

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் கமல்ஹாசன் – தலைவர், மக்கள் நீதி மய்யம்

நடிகர் சத்யராஜ்

தி.மு.க தலைவர் அவர்களுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாகப் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தவர்கள் விவரம் வருமாறு:

தேவகவுடா - முன்னாள் பிரதமர் மதச்சார்பற்ற ஜனதா தளம்

செல்வி. மம்தா பானர்ஜி - முதலமைச்சர், மேற்கு வங்கம், திரிணாமுல் காங்கிரஸ்

அரவிந்த் கெஜ்ரிவால் - முதலமைச்சர், டெல்லி

சுப்ரியா சுலே எம்.பி- தேசியவாத காங்கிரஸ் கட்சி

தேஜஸ்வி யாதவ் - ராஷ்டிரிய ஜனதா தளம்

உமர் அப்துல்லா - தேசிய மாநாட்டுக் கட்சி

தோழர். சீத்தாராம் யெச்சூரி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

சச்சின் பைலட் - காங்கிரஸ்

பிரசாந்த் கிஷோர் - அரசியல் ஆலோசகர்

“கலைஞர் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் துணை நின்று பணியாற்றுவேன்” - பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் உறுதி!

பின்னர், சென்னை - அண்ணா சாலையில் உள்ள சிறுமலர் பள்ளிக்குச் சென்று, அங்கு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். பின்னர் அவர்களிடையே உரையாற்றியதன் விவரம் வருமாறு:

“ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1-ஆம் தேதி என்னுடைய பிறந்தநாள் வருகிறபோதெல்லாம் தவறாமல் இந்த சிறுமலர் இல்லத்திற்கு நான் வருவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் வழக்கமாக எனக்கு வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், எனக்கு இன்றைக்கு பல்வேறு கட்சியின் தலைவர்கள், அகில இந்திய அளவில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள்.

அந்த வாழ்த்துகள் எல்லாம் எனக்குப் பெருமை சேர்த்து இருந்தாலும், அதையெல்லாம் விட பெரிய மகிழ்ச்சி என்ன என்று கேட்டால், நீங்கள் தந்த இந்த வாழ்த்துகள்தான். பெருமையாக இருக்கிறது. அதுதான் எனக்கு தேவையாகவும் இருக்கிறது.

நான் அடிக்கடி ஒவ்வொரு பிறந்தநாள் வருகிறபோதெல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு வந்து பேசுகிறபோது சொல்லி இருக்கிறேன். ஆண்டுக்கு ஒருமுறை எனக்குப் பிறந்தநாள் வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை இங்கு வருகிற வழக்கத்தை வைத்திருக்கிறேன்.

என்னுடைய பிறந்தநாள் வருடத்திற்கு 2 முறை வரக்கூடாதா என்று எனக்கு ஒரு எண்ணம் கூட எனக்கு ஏற்படுவதுண்டு. ஆனால் அவ்வாறு வந்தால் எனக்கு வயது அதிகமாகிக்கொண்டே சென்றுவிடும். அதையும் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. இருந்தாலும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில், நீங்கள் வாழ்த்துச் சொல்கிற நேரத்தில் ஒன்று நினைவுக்கு வருகிறது. நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் தான், ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

அதுமட்டுமல்ல, அந்த மாற்றுத்திறனாளிகள் துறையைத் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, தன் வசமே வைத்துக்கொண்டிருந்தார். அவர்களுக்கு வேண்டிய வசதிகளை – சலுகைகளை - புதிய திட்டங்களை எல்லாம் வகுத்துத் தந்தார்.

எனவே நீங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். விரைவில் ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் நிச்சயமாக ஏற்படப்போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களை விட, நீங்கள் தான் அதிகமான அளவிற்கு அதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே நிச்சயமாக அந்த மாற்றம் ஏற்படும்.

ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப்பிறகு, எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக, சமூகத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் - ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றி இருக்கிறாரோ, அந்த வகையில் நிச்சயமாக, அவர் வழி நின்று நானும் என்னுடைய கடமையை ஆற்றுவேன் என்ற அந்த உறுதியை இந்த பிறந்தநாள் விழாவில், அதிலும் சிறுமலர் இல்லத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உங்களோடு பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் நான் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறேன்.

உங்கள் அன்பிற்கும் – ஆர்வத்திற்கும் – உற்சாகத்திற்கும் - வாழ்த்துகளுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories