முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 1,33,000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.
அப்போது, சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் மா.சுப்பிரமணியன் MLA மற்றும் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் உடன் இருந்தனர்.
சோழிங்கநல்லூர் மத்தியப் பகுதியில், பகுதிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. எஸ்.அரவிந்த் ரமேஷ் அவர்களது ஏற்பாட்டில் கணேசன் நாயக்கர் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30,097 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.
சோழிங்கநல்லூர் கிழக்குப் பகுதியில், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. தா.விஸ்வநாதன் அவர்களது ஏற்பாட்டில் பாலவாக்கம் அண்ணா சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 12,500 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.
சோழிங்கநல்லூர் மேற்குப் பகுதியில், பகுதிச் செயலாளர் திரு. எஸ்.வி.ரவிச்சந்திரன் அவர்களது ஏற்பாட்டில் பெருங்குடி - திருமலை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10,000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.
வேளச்சேரி மேற்குப் பகுதியில், பகுதிச் செயலாளர் திரு. சு.சேகர் அவர்களது ஏற்பாட்டில் காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10,000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.
சைதை கிழக்குப் பகுதியில், பகுதிச் செயலாளர் திரு. இரா.துரைராஜ் அவர்களது ஏற்பாட்டில் மடுவின்கரை பிள்ளையார் கோவில் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10,000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.
ஆலந்தூர் வடக்குப் பகுதியில், பகுதிச் செயலாளர் திரு. பி.குணாளன் அவர்களது ஏற்பாட்டில் தர்மராஜா கோயில் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10,000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.
கலைஞர் நகர் தெற்குப் பகுதியில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு. க.தனசேகரன் அவர்களது ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30,000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.
கலைஞர் நகர் தெற்குப் பகுதியில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திரு. ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா அவர்களது ஏற்பாட்டில் 9-வது செக்டார், 46-வது தெரு, பத்ம சேஷாத்ரி பள்ளி நடைபெற்ற நிகழ்ச்சியில் 20,500 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.