மு.க.ஸ்டாலின்

‘கலைஞர், பேராசிரியர் வழியில் பணியாற்றுவோம் என உறுதியேற்போம்’ -படத்திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் உருக்கம்

தமிழின உணர்வும், தமிழ் மொழிப்பற்றும், திராவிட இயக்க கொள்கையும் கொண்டவர்களாக வாழ பேராசிரியர் படத் திறப்பு விழாவில் உறுதி ஏற்போம் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘கலைஞர், பேராசிரியர் வழியில் பணியாற்றுவோம் என உறுதியேற்போம்’ -படத்திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் உருக்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க பொதுச் செயலாளர் இனமான பேராசிரியரின் திருவுருவப் படத்திறப்பு விழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் திருவுருவப்படத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பேராசிரியரின் குடும்பத்தினர் மற்றும் தி.மு.க நிர்வாகிகள், தோழமைக் கட்சி தலைவர்கள் பேராசிரியர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பேராசிரியரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து உரையாற்றிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க வின் பொதுச்செயலாளராக 43 ஆண்டுகாலம் பொறுப்பு வகித்ததோடு, முத்தமிழறிஞர் கலைஞருக்கு தோள் கொடுத்தவர் பேராசிரியர் என்றும், தனக்கு ஒவ்வொரு கட்டத்திலும் ஊக்கமளித்து உற்சாகமூட்டியவர் பேராசிரியர் பெருந்தகை என்றார்.

‘கலைஞர், பேராசிரியர் வழியில் பணியாற்றுவோம் என உறுதியேற்போம்’ -படத்திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் உருக்கம்

தொடர்ந்து, முத்தமிழறிஞர் கலைஞர் மறைந்த போது எந்த மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையிலேயே தற்போதும் இருக்கிறேன். பேராசிரியரின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய இழப்பு. ஏனெனில், தலைவர் கலைஞருக்கு மட்டுமல்லாது, எனக்கும் தொடர்ந்து தோள் கொடுத்து வந்தவர். பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாகவும், முத்தமிழறிஞர் கலைஞரை தாங்கும் நிலமாகவும் விளங்கியவர் பேராசிரியர். எனது சிறகை நான் விறிக்க வானமாகவும் இருந்தவர் அவர்.

98 வயதான பேராசிரியருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா எடுக்கவும் ஆலோசித்திருந்தோம். ஆனால், தலைவர் கலைஞர் மறைந்தபோதே பேராசிரியரின் உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டுவிட்டது என்றார் மு.க.ஸ்டாலின்.

இறுதியாக, தமிழின உணர்வும், தமிழ் மொழிப்பற்றும், திராவிட இயக்க கொள்கையும் கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும் என்றும், பேராசிரியர் விட்டு சென்ற பணிகளை, கலைஞர் வழிநின்று செயல்படுத்த நாம் உறுதி ஏற்போம் என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories