மு.க.ஸ்டாலின்

“கொள்கை உரம் ஊட்டிய இந்நூற்றாண்டின் தலைவன்; அண்ணா விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம்” : மு.க.ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினத்தையொட்டி அண்ணா விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“கொள்கை உரம் ஊட்டிய இந்நூற்றாண்டின் தலைவன்; அண்ணா விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம்” : மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி இன்று நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து தொடங்கிய இந்த அமைதிப்பேரணி அண்ணா நினைவிடத்தில் முற்றுப்பெற்றது. அப்போது பேரணியாக சென்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த அமைதிப் பேரணியில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் , தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிலையில் பேரறிஞர் அண்ணா விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “அரசியல் அறத்தைப் போதித்த காஞ்சி தந்த வள்ளுவன்- கொள்கை உரம் ஊட்டிய இந்நூற்றாண்டின் தலைவன்- பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவுநாள் இன்று!

அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு? அவரது கொள்கையும், வாழ்வும் என்றும் நம்மை இயக்குகிறது. அண்ணன் விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories