இந்திய அரசியல் சாசனம் இயற்றப்பட்டதன் 70ம் ஆண்டை நினைவு கூறும் நோக்கில், அரசியலமைப்பு நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''இந்த அரசியலமைப்புச் சட்ட நாளில், நம்முடைய அரசியலமைப்பை உருவாக்கிய மேதைகளை நினைவுகூர்கிறேன்.
சில நாட்களுக்கு முன்பு, தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் கூட்டாட்சி முறை குறித்து ஒரு சிறப்புத் தீர்மானத்தை முன்மொழிந்தேன். இன்று, மத்திய - மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளவாறு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனிச் சிறப்புத் தீர்மானத்தை இணைத்திருந்தார்.