மு.க.ஸ்டாலின்

3,000 கோடி ரூபாய் கமிஷனை வாரிச் சுருட்டுவதுதான் எடப்பாடியின் திட்டம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கும்போது 8 வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும் என எடப்பாடி பழனிசாமி துடிப்பதற்கு என்ன காரணம்? 3,000 கோடி ரூபாய் கமிஷனை வாரிச் சுருட்டுவதுதான் திட்டம்.

3,000 கோடி ரூபாய் கமிஷனை வாரிச் சுருட்டுவதுதான் எடப்பாடியின் திட்டம்: மு.க.ஸ்டாலின் பேச்சு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவு அருகே இன்று நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது : “கொங்கு மண்டலம் அ.தி.மு.க-வின் கோட்டை என்று கூறப்பட்டு வந்த கூற்றை மக்கள் இந்தத் தேர்தலில் உடைத்துள்ளனர். வாக்கு கேட்க எப்படி ஓடி வந்தேனோ, அதேபோல நன்றி தெரிவிக்கவும் ஓடோடி வந்துள்ளேன். நன்றி மறக்காமல் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்கு தமிழகத்தில் எப்படியொரு மரண அடியைக் கொடுத்திருக்கிறீர்களோ அதேபோல ஒரு மரண அடியை விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு அளிக்கவேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் நமக்குப் பெரும் வெற்றியை அளித்த தமிழக மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றவகையில் நாடாளுமன்றத்தில் நம் உறுப்பினர்கள் வாதாடவேண்டும்; போராடவேண்டும்.

தென் மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி அணுக்கழிவுகளை சேமிக்கும் மையம் அமைக்கும் முயற்சி நடைபெறுகிறது; நீட் தேர்வால் இந்த ஆண்டும் 3 மாணவிகளை இழந்திருக்கிறோம். தலைநகர் முதல் குக்கிராமங்கள் வரை குடிநீர் பிரச்னை நிலவுகிறது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்களையும், சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தையும் சிறப்பாகச் செயல்படுத்தி இருக்கிறோம்.

3,000 கோடி ரூபாய் கமிஷனை வாரிச் சுருட்டுவதுதான் எடப்பாடியின் திட்டம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தின் பிரச்னைகள் பற்றி மத்தியில் ஆளும் பிரதமருக்கும் கவலை இல்லை; மாநிலத்தை ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கவலை இல்லை. எட்டு ஆண்டுகளாக ஆளும் அ.தி.மு.க அரசு எந்த குடிநீர்த் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை.

இந்தியை எப்படியாவது தமிழகத்தில் திணிக்கவேண்டும் என மும்மொழித் திட்டத்தைப் பரிந்துரை செய்திருக்கிறது மத்திய அரசு. தமிழக முதல்வர் என்கிற முறையில் எடப்பாடி பழனிசாமி அதை எதிர்த்து ஒரு அறிக்கையாவது விடுத்திருக்க வேண்டாமா?

தி.மு.க போராட்டங்களை நடத்திக்கொண்டே இருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியில் குறைகள் இருப்பதால் தானே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடும் மக்களை அழைத்துப் பேச எடப்பாடி அரசுக்கு தைரியம் இருக்கிறதா? எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் விவசாயிகளைச் சந்தித்து அவர்களிடம் பேசவோ, சமரசம் செய்யவோ உங்களால் முடிந்திருக்கிறதா?

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எட்டு வழிச்சாலை என்று கூறுகிறார்கள். சேலத்தில் மட்டும்தான் போக்குவரத்து நெரிசலா? மதுரை, கோவை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இல்லையா? பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கும்போது எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும் என எடப்பாடி பழனிசாமி துடிப்பதற்கு என்ன காரணம்? 3,000 கோடி ரூபாய் கமிஷனை வாரிச் சுருட்டுவதுதான் திட்டம்.

3,000 கோடி ரூபாய் கமிஷனை வாரிச் சுருட்டுவதுதான் எடப்பாடியின் திட்டம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்கிறார்கள். எந்தளவுக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்பதற்கு பொள்ளாச்சியே சாட்சி. பொள்ளாச்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கும் ஆட்சி இது. பொள்ளாச்சிக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தைத் துடைப்பதுதான் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும் எங்கள் முதல் வேலை.

பல்வேறு பிரச்னைகளைப் பற்றியும் விவாதிக்க அ.தி.மு.க அரசு ஏன் சட்டமன்றத்தைக் கூட்ட அஞ்சுகிறது? இப்போது தனிப்பட்ட முறையிலே தி.மு.க-வுக்கு சட்டமன்றத்தில் 101 உறுப்பினர்கள் இருக்கின்றனர். சட்டமன்ற இடைத்தேர்தல் மூலம் நமது உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கிற வாக்காளர்களுக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories