சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 203 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், பொதுப் பிரிவினருக்கு 63 இடங்களும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 54 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 41 இடங்களும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய பிரிவினருக்கு 6 இடங்களும், ஆதி திராவிடர் பிரிவினருக்கு 31 இடங்களும், அருந்ததியர் உட்பிரிவினருக்கு 6 இடங்களும், பழங்குடியினர் பிரிவினருக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று, கூட்டுறவுப் பயிற்சியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது கூட்டுறவு பயிற்சி பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.14,000 முதல் ரூ.47,500 வரை ஊதியவிகிதம் அளிக்கப்படும். 30 வயதிற்குள் இருக்கிற பொதுப்பிரிவினர் விண்ணப்பிக்கலாம். இதர பிரிவினர்களுக்கு வயது உச்சவரம்பு கிடையாது.
அதேபோல கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் வேலைக்கு 117 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில், நகர கூட்டுறவு வங்கிகளில் 50 இடங்களும், பணியாளர் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் 24 இடங்களும், நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களில் 2 இடங்களும், திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கங்களில் 22 இடங்களும், சென்னை மத்திய கூட்டுறவு அச்சகத்தில் 2 இடங்களும், திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கத்தில் இளநிலை உதவியாளர் வேலைக்கு 17 இடங்களும் காலியாக உள்ளன.
அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களில், பொதுப் பிரிவினருக்கு 36 இடங்களும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 30 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 24 இடங்களும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய பிரிவினருக்கு 4 இடங்களும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 18 இடங்களும், அருந்ததியர் உட்பிரிவினருக்கு 4 இடங்களும், பழங்குடியினர் பிரிவினருக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று, கூட்டுறவுப் பயிற்சியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது கூட்டுறவு பயிற்சி பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு குறைந்தபட்சம் ரூ.11,900 முதல் ரூ.47,600 வரைக்கும் ஊதியவிகிதம் அளிக்கப்படும். 30 வயதிற்குள் இருக்கிற பொதுப்பிரிவினர் விண்ணப்பிக்கலாம். இதர பிரிவினர்களுக்கு வயது உச்சவரம்பு கிடையாது.
தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மத்திய கூட்டுறவு வங்கி எழுத்து தேர்வு மார்ச் 22ம் தேதியும்,கூட்டுறவு சங்கங்களின் எழுத்துத் தேர்வு மார்ச் 29ம் தேதியும் நடைபெறும்.
www.chndrb.in எனும் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பிப்ரவரி 26.