கல்வி & வேலைவாய்ப்பு

Job Offers : நபார்டு வங்கியில் முதல்நிலை அதிகாரி பணியிடங்கள் - 150 பேருக்கு வேலைவாய்ப்பு!

நபார்டு வங்கியில் காலியாக உள்ள 150 Grade A Officer பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Job Offers : நபார்டு வங்கியில் முதல்நிலை அதிகாரி பணியிடங்கள் - 150 பேருக்கு வேலைவாய்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
கவிமணி
Updated on

பொதுப்பிரிவில் மொத்தம் 69 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது, Chartered Account, Cost Account, Bachelors Degree with Company Secretary படிப்புகள் முடித்திருக்கவேண்டும். அல்லது, Management பாடப்பிரிவில் இரண்டு வருட முழுநேர முதுநிலை டிப்ளமோ அல்லது எம்.பி.ஏ. பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

General Agriculture பிரிவில் 4 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்னப்பிக்க, Agriculture பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Agricultural Engineering பிரிவில் 3 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Agricultural Engineering பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Food அல்லது Dairy Processing பிரிவில் 3 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Food Processing, Food Technology, Dairy Sciences and Technology ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Land Development and Soil Science பிரிவில் 3 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Agriculture, Soil Science, Agronomy ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Environmental Engineering & Sciences பிரிவில் 4 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Environmental Engineering, Environmental Science பாடப்பிரிவுகளில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Agriculture Marketing அல்லது Agriculture business Management பிரிவில் 2 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Agriculture Marketing, Agriculture business Management பாடப்பிரிவுகளில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது, MBA அல்லது PG Diplamo படித்திருக்க வேண்டும்.

Job Offers : நபார்டு வங்கியில் முதல்நிலை அதிகாரி பணியிடங்கள் - 150 பேருக்கு வேலைவாய்ப்பு!
KAVIMANI

Geo Informatics பிரிவில் 2 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Geo Informatics பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Agriculture Economics அல்லது Economics பிரிவில் 5 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Economics அல்லது Agriculture Economics பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Information Technology பிரிவில் 12 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Computer Science, Computer Technology, Computer Application, Information Technology போன்ற பாடப்பிரிவுகளில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் படித்திருக்க வேண்டும்.

Chartered Accountant பிரிவில் 8 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பெற்று Institute of Chartered Accountants of India-வில் உறுப்பினராக இருக்கவேண்டும்.

Company Secretary பிரிவில் பிரிவில் 3 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பெற்று, Institute of Company Secretaries of India-வில் உறுப்பினராக இருக்கவேண்டும்.

Job Offers : நபார்டு வங்கியில் முதல்நிலை அதிகாரி பணியிடங்கள் - 150 பேருக்கு வேலைவாய்ப்பு!

Finance பிரிவில் 16 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Finance அல்லது Banking பாடப்பிரிவில் BBA, BMS பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Finance பாடப்பிரிவில் 2 வருட MBA அல்லது PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Human Resource Management பிரிவில் பிரிவில் 3 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Human Resource Management பாடப்பிரிவில் BBA, BBM, BMS ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது, Human Resource Management பாடப்பிரிவில் 2 வருட MBA அல்லது PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Statistics பிரிவில் 2 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Statistics பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிகளுக்கு ரூ.28,150 முதல் ரூ.55,600 வரை ஊதிய விகிதம் அளிக்கப்படும். 1.1.2020ம் தேதியின்படி 21 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

பிப்ரவரி 25ம் தேதி, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், ஈரோடு, விருதுநகர் ஆகிய இடங்களில் முதல்நிலை ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெறும்.

www.nabard.org எனும் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 3.

banner

Related Stories

Related Stories