இந்தியா

”அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க உயிரையும் தியாகம் செய்ய தயார்” : ராகுல் காந்தி அதிரடி!

அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக ராகுல் காந்தி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

”அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க உயிரையும் தியாகம் செய்ய தயார்” : ராகுல் காந்தி அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிராவில் நவம்பர் 20 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரே அணியாக இணைந்து போட்டியிடுகிறது.

அதே நேரம் பா.ஜ.க, சிவசேனாவில் இருந்து பிரிந்த ஷிண்டே பிரிவு, தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்த அஜித் பவார் பிரிவு ஆகியவை ஒரே அணியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. எனினும் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதற்கு காரணம், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெற்றதேயாகும். இதனால் பீதியில் உள்ள பா.ஜ.க கூட்டணி பல்வேறு சதித்திட்டங்களை தீட்டிவருகிறது. மேலும் மதவாத கருத்துக்களை தனது தேர்தல் பரப்புரையாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி,”அரசியலமைப்புச் சட்டத்தைப் படிக்காததால் பிரதமர் மோடிக்கு அது வெறுமையாகத் தெரிகிறது. ஆனால் நாங்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம்.

பிர்சாமுண்டா, காந்தியடிகள், அம்பேத்கர் போன்ற தலைவர்களை பிரதமர் மோடி அவமதித்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வரவேண்டிய தொழில்முதலீடு திட்டங்களை பா.ஜ.க ஆளும் குஜராத்திற்கு திருப்பி விட்டுள்ளார்கள். இம்மாநிலத்தின் வளர்ச்சி மீது பா.ஜ.கவுக்கு அக்கறையில்லை என்பது இதன்மூலம் தெளிவாகியுள்ளது.

மகாவிகாஸ் அகாடி (இந்தியா கூட்டணி) ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, கட்டணமில்லா பேருந்து சேவைகள் வழங்கப்படும். விவசாயிகளின் ரூ.3 லட்சம் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories