இந்தியா

இலங்கையில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு செய்ய வேண்டும்! : தொல்.திருமாவளவன் கடிதம்!

இலங்கையில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு செய்ய வேண்டும்! : தொல்.திருமாவளவன் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இலங்கை பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தங்கப் பதக்கமும், ரொக்கப் பரிசும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வி.சி.க தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கை தெற்கு பகுதியில் உள்ள சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இந்தியில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியருக்கு தங்கப் பதக்கம் மற்றும் 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு செய்ய வேண்டும்! : தொல்.திருமாவளவன் கடிதம்!

ஆனால், இலங்கையில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற விருதுகளும், ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதில்லை. இலங்கையில் உள்ள தமிழர்கள் வரலாற்று ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டுள்ளனர்.

இந்தச் சூழலில், தமிழைக் கவனிக்காமல், இந்தியை ஆதரிப்பது ஒரு சார்பு உணர்வை உருவாக்குகிறது. எனவே, இலங்கையில் உள்ள சபரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தங்கப் பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories