இந்தியா

வயநாட்டிற்கு தாயாய் இருந்து பணியாற்ற விரும்புகிறேன்! : கேரளத்தில் பிரியங்கா காந்தி பேச்சு!

வயநாட்டிற்கு தாயாய் இருந்து பணியாற்ற விரும்புகிறேன்! : கேரளத்தில் பிரியங்கா காந்தி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவில் தொடங்கி, காந்தி குடும்பத்தினர் அனைவரும் காங்கிரஸில் பல பொறுப்பு வகித்தவர்களாக இருக்கின்றனர்.

நேருவின் மகள் இந்திரா காந்தி, இந்தியாவின் முதல் பெண் பிரதமராக விளங்கினார். அவரின் மகன் ராஜீவ் காந்தியும் பிரதமர் பதவி வகித்தவரே.

இவர்கள் வரிசையில், ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி, தனது 17 வயது முதல் காங்கிரஸின் பல்வேறு தலைவர்களுக்கான தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

கிழக்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளராக ஓராண்டு காலம் பொறுப்பு வகித்த பிரியங்கா காந்தி, 2020ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

வயநாட்டிற்கு தாயாய் இருந்து பணியாற்ற விரும்புகிறேன்! : கேரளத்தில் பிரியங்கா காந்தி பேச்சு!

இந்நிலையில், தனது சகோதரர் ராகுல் காந்தி, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், 2024 மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டு வென்ற வயநாடு மக்களவைத் தொகுதியில், தனது அரசியல் வாழ்வில் முதன்முறையாக போட்டியிடுகிறார் பிரியங்கா காந்தி.

அவ்வகையில், கேரளத்தில் மும்முரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “என் குழந்தைகளுக்கு தாயாய் பணிவிடை செய்வதைப் போல, வயநாடு மக்களுக்கு தாயாய் இருந்து பணியாற்ற விரும்புகிறேன். ஒன்றிய பா.ஜ.க.வினால் முன்னெடுக்கப்படும் வஞ்சிப்புகளுக்கு இடம் கொடுக்காமல், பாதுகாப்பேன்.

நாடாளுமன்றத்தில் மட்டும் வயநாட்டிற்காக குரல் எழுப்பாமல், அனைத்து நிலைகளிலும் வயநாட்டிற்கான குரலாக இருப்பேன்” என நெகிழ்ச்சி உரையாற்றியிருக்கிறார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு மக்களவை இடைத்தேர்தல் வேட்பாளருமான பிரியங்காவின் உரையை மக்கள் பெருமளவில் வரவேற்று வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories