இந்தியா

”ஜனநாயகத்தை அழித்து வரும் மோடி அரசு” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

பா.ஜ.க மற்றும் மோடி அரசு ஜனநாயகத்தை அழித்து வருகிறது என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

”ஜனநாயகத்தை அழித்து வரும் மோடி அரசு” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து வயநாடு தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் வயநாடு தெரட்டம்மாளில் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, "எனக்கு வரவேற்பு அளித்துள்ள வயநாடு மக்களின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி. ராகுல் காந்திக்கு நீங்கள் காட்டிய ஆதரவுக்கும் வலிமைக்கும் நன்றிகள்.

ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது ராகுல் காந்தியின் தனி நபர் போராட்டம் அல்ல. அது ஒட்டுமொத்த தேசத்திற்கான போராட்டம். அகிம்சை வழியில் விடுதலை பெற்ற ஒரே நாடு நமது நாடுதான்.

ஆனால் இன்று ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிராக பா.ஜ.க செயல்பட்டு வருகிறது. மேலும், பா.ஜ.க மற்றும் மோடி அரசு ஜனநாயகத்தை அழித்து, கோபத்தையும், வெறுப்பையும், பிரிவினையையும் பரப்பி வருகிறது. 5 பெரிய முதலாளிகளுக்கு உதவும் வகையிலேயே பா.ஜ.கவின் கொள்கைகள் உள்ளது.

இதனால் ஏழை, எளிய பொதுமக்களை பா.ஜ.க புறக்கணித்து வருகிறது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு இன்னும் ஒன்றிய அரசு இழப்பீடு வழங்காமல் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories