இந்தியா

கடவுளை காரணம் காட்டுவது சரியா? : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

கடவுளை காரணம் காட்டுவது சரியா? : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

உலகின் மிகப்பெரிய மக்களாட்சி உடைய நாடு என்ற பெயர் இந்தியாவிற்கு கிடைக்க, பல வகைகளில் உறுதுணையாக இருக்கும் துறையாக நீதித்துறை விளங்கி வருகிறது.

தேர்தல் பத்திரம் என்கிற முறையால், பா.ஜ.க.வினால் முன்னெடுக்கப்பட்டு வந்த கொள்ளை நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையிட்டதில், இந்திய நீதித்துறை பெரும் பங்கு உள்ளது.

மத பூசல்களுக்கும், முதலாளித்துவ வஞ்சிப்பிற்கும் வித்திடும் ஒன்றிய பா.ஜ.க.விடமிருந்து, நீதியை மீட்டெடுக்கும் இடமாக நீதிமன்றங்கள் அமைந்திருக்கின்றன.

எனினும், ஒன்றிய பா.ஜ.க.வினரின் அழுத்தத்தால், நீதிமன்றங்களும் அவ்வப்போது கடமை தவறுகின்றனவா? என்ற கேள்வி அடிக்கடி எழுந்து வருவது தொடர்ந்து வருகின்றன.

அதற்கு எடுத்துக்காட்டுகளாக, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உள்ளிட்ட உயர்நீதிமன்றங்கள் பிரிவினை கூற்றுகளை முன்மொழிவதும், சிறுபான்மையினர்களின் மத ஆலயங்களை இடிக்க அனுமதி அளிப்பதுமான நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

கடவுளை காரணம் காட்டுவது சரியா? : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இது போன்ற நடவடிக்கைகளை கண்டிக்கும் இடத்தில் இருக்கக்கூடிய உச்சநீதிமன்றத்திலேயே, கடமை தவறிய நடவடிக்கை அரங்கேறி விட்டதோ என்ற கேள்வி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூற்றால் எழுந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு பொது நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “நீதித்துறையிலும் சில நேரங்களில் தீர்ப்பு வழங்குவது என்பது மிகவும் கடினமானது. அது போன்ற நேரங்களில் எனக்கு உதவிகரமாக இருப்பது கடவுள் தான்.

ராமர் கோவில் - பாபர் மசூதி வழக்கில் கூட எனக்கு உதவியது கடவுள் தான்” என பேசியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து விமர்சகர்கள், “எந்த கடவுள், ஒரு மத ஆலயத்தை இடித்து, வேறொரு மத ஆலயத்தை நிறுவச் சொல்லுகிறார். தகுந்த ஆதாரமற்று தீர்ப்பை வழங்கிய பின், அதற்கு சாக்காக கடவுளை இழுப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இதனிடையே, ஒரு குறிப்பிட்ட மத திருநாளில் அரசியல் சார்பற்றவர்களாக விளங்கவேண்டிய நீதிபதிகளுக்கெல்லாம் தலைமை பொறுப்பு வகிக்கக்கூடிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வீட்டிற்கு பிரதமர் மோடி அழைக்கப்பட்டு, கூட்டுக்கொண்டாட்டம் மேற்கொண்டது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நடவடிக்கைகள், நீதித்துறையின் மீது இருக்கிற ஓரளவு நம்பிக்கை உணர்வையும், குலைப்பதாக அமைந்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories