இந்தியா

பாலியல் ரீதியாக துன்புறுத்தல் : பா.ஜ.க மூத்த தலைவர் மீது நடிகை குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் புனித் தியாகி மீது மும்பை நடிகை ஒருவர் பாலியல் குற்றம் சாட்டியுள்ளார்.

பாலியல் ரீதியாக துன்புறுத்தல் : பா.ஜ.க மூத்த தலைவர் மீது நடிகை குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரப் பிரதேசத்தின் சஹரான்பூர் பா.ஜ.க நகர பிரிவின் தலைவராக இருப்பவர் புனித் தியாகி. இவர் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றம் சாட்டி, தனது சமூக ஊடகத்தில் விடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தி, போஜ்புரி, ஹிந்தி மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மும்பையை சேர்ந்த நடிகை, தன்னை நீண்ட காலமாக பாலியல் ரீதியாக சுரண்டியதாகவும், தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.

நடிகையின் குற்றச்சாட்டை மறுத்த புனித் தியாகி, பதவி விலகுவதாகக் கூறி, உத்தரப் பிரதேசத்தின் பா.ஜ.க தலைவர் பூபேந்திர சிங் சௌத்ரியிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். புனித் தியாகி, தனது ராஜிநாமா கடிதத்தில் எனக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories