இந்தியா

கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிரிழப்பு : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் பீகார் மாநிலத்தில் அவலம்!

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிரிழப்பு : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் பீகார் மாநிலத்தில் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம், மகர் மற்றும் அவுரியா பஞ்சாயத்துகளில் 3 பேர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் குழு அப்பகுதிக்கு சென்று விசாரணை செய்தபோது, 12க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

பின்னர் கிராம மக்களிடம் விசாரணையில், அவர்கள் கள்ளச்சாராயம் குடித்தது தெரியவந்தது. அதேபோல் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்துக் கொண்டிருந்த போதே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிவான் மற்றும் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகார் மாநிலத்தில் 2016 ஆம் ஆண்டு நிதிஷ்குமார் அரசு மதுவிற்பனைக்கு தடை விதித்தது. இருந்தும் இம்மாநிலத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்பட்டே வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசே ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories