இந்தியா

ஜம்மு காஷ்மீர் தேர்தல் : 5 ஆவது முறை வெற்றி - யார் இந்த யூசூப் தாரிகாமி?

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் குல்காம் தொகுதியில் 5 ஆவது முறையாக யூசூப் தாரிகாமி வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் : 5 ஆவது முறை வெற்றி - யார் இந்த யூசூப் தாரிகாமி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா கூட்டணியில், தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும், சி.பி.எம் ஒரு தொகுதியிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

அதேபோல் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி 81 தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ஜ.க யாருடனும் கூட்டணி வைக்காமல் 62 தொகுதிகளில் மட்டுமே தனித்து போட்டியிட்டது.

இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் இந்தியா கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜ.க படுதோல்வி அடைந்துள்ளது.

மேலும் குல்காம் தொகுதியில் போட்டியிட்ட CPM வேட்பாளர் யூசூப் தாரிகாமி 7838 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்த தொகுதியில் 5 ஆவது முறையாக தொடர்ச்சியாக வெற்றி பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் : 5 ஆவது முறை வெற்றி - யார் இந்த யூசூப் தாரிகாமி?

யார் இந்த யூசூப் தாரிகாமி?

1967 ஆம் ஆண்டு தனது 18 வயதில் அனந்த்நாக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் விவசாயிகள் போராட்டம் என தொடங்கிய இவரது அரசியல் பயணம் 75 வயதிலும் தொடர்கிறது.

1975 ஆம் ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீரை இந்திய ஒன்றியத்தின் ஒரு அங்கமாக மாற்றிய பிறகு, சுயநிர்ணய உரிமைக்காக போராடியதால் சிறை சென்றார். இவர் சிறையில் இருந்தபோது அவரது மனைவி உயிரிழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தொடர்ச்சியாக வீதிகளிலும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

முகமது யூசூப் ராதர் என்பதுதான் இவரது இயற்பெயர். 1975 ஆம் ஆண்டு இவர் சிறையில் இருந்தது குறித்து செய்தியாளர் ஒருவர் அப்போதைய முதல்வர் ஷேக் அப்துல்லாவுடன் கேள்வி எழுப்பினார். அப்போது, "தாரிகாமில் இருந்து வந்தவரா?" என அவரது ஊர் பெயரை குறிப்பிட்டார். அன்று முதல் ராதர் மறைந்து முகமது யூசூப் தாரிகாமி என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 1949-ல் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370ஐ ஒன்றிய அரசு ரத்து செய்தது.இதை எதிர்த்தால் யூசூப் தாரிகாமி 35 நாட்கள் வீட்டு சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1996 ஆம் ஆண்டு குல்காம் தொகுதியில் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் களமிரங்கி 51.56 % வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியை பெற்றார். அதன் பிறகு 2002, 2008, 2014 ஆகிய தேர்தல்களிலும் தொடர் வெற்றியை பதிவு செய்தார். தற்போது 5 ஆவது முறையாக அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories