இந்தியா

இரண்டாவது நாளாக தொடரும் மீனவர் வேலைநிறுத்தப் போராட்டம்! : செவிசாய்க்காத ஒன்றிய பா.ஜ.க அரசு!

தமிழ்நாட்டு மீனவர்ளுக்கு, இலங்கை கடற்படையாலும், கடற்கொள்ளையர்களாலும் முன்னெடுக்கப்படும் அநீதி தொடர்ந்து வருகிறது என்பதை விட, அதிகரித்துள்ளது என்பதே, இலங்கை கடற்படையின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

இரண்டாவது நாளாக தொடரும் மீனவர் வேலைநிறுத்தப் போராட்டம்! : செவிசாய்க்காத ஒன்றிய பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

உலகின் இரண்டாவது பெரிய இராணுவப்படை கொண்ட நாடு இந்தியா. 8ஆவது பெரிய கடற்படை கொண்ட நாடு இந்தியா. இந்திய பாதுகாப்புத்துறைக்கு ஆண்டிற்கு சுமார் 6.21 இலட்சம் கோடி ஒன்றிய அரசால் செலவு செய்யப்படுகிறது.

எனினும், அண்டை நாடுகளிடமிருந்து இந்திய மக்களை காப்பதில் முழு கவனம் செலுத்துகிறதா ஒன்றிய அரசு என்றால், அது கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது. பாதுகாப்பதிலும் பாரபட்ச நடவடிக்கைகளே நீடிக்கின்றன.

பாகிஸ்தான் உடனான எல்லையில் மிகுந்த கவனம் செலுத்துவதாக முன்மொழிந்து வரும் இந்திய பாதுகாப்புத்துறை, அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய நிலப்பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்ய அனுமதித்துள்ளதும், இந்தியாவின் தெற்கு எல்லையான இந்தியப் பெருங்கடல் பகுதியில், தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காணும் நடவடிக்கை எடுக்காமையும், ஒன்றிய அரசின் மீதான அதிருப்தியை அதிகரிக்க செய்துள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டு மீனவ மக்களுக்கு, இலங்கை கடற்படையாலும், இலங்கை கடற்கொள்ளையர்களாலும் முன்னெடுக்கப்படும் சிக்கல்கள் தொடர்ந்து வருகிறது என்பதை விட, அதிகரித்துள்ளது என்பதே, இலங்கை கடற்படையின் அண்மை நடவடிக்கைகள் உணர்த்துவதாய் அமைந்துள்ளன.

இரண்டாவது நாளாக தொடரும் மீனவர் வேலைநிறுத்தப் போராட்டம்! : செவிசாய்க்காத ஒன்றிய பா.ஜ.க அரசு!

2014ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்பதற்கு முன்பு, ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மீனவர்கள் சந்தித்து வரும் எல்லைச் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என நரேந்திர மோடி பிரச்சாரக் குரல் எழுப்பி, 11 ஆண்டுகள் நிறைவு பெற இருக்கிறது.

எனினும், அது பிரச்சாரக் குரலுடன் நின்றுவிட்டதே தவிர, நடவடிக்கையாக முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில், கடல் எல்லைக்கடந்ததாகக் கூறி, இலங்கை கடற்படையால், செப்டம்பர் 21ஆம் நாள் ராமேசுவரம் மீனவர்கள் 37 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மீனவர்கள் மீது ஒப்புக்கொள்ளாத வகையில் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இந்திய வெளியுறவுத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தாலும், இந்திய கடற்படையின் அலட்சியம் கூட இதற்கு காரணம் தான் என்ற கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, ராமேசுவரம் மீனவர்கள் கூட்டாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்து, அப்போராட்டம் இன்று இரண்டாவது நாளாக, உண்ணாவிரதத்துடனான போராட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு அரசின் சார்பிலும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சார்பிலும், ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதப்பட்ட நிலையில், மணிப்பூர் கலவரத்தையும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தகுதி உரிமைக்குரலையும், லடாக்கின் தன்னாட்சிக்கோரிக்கையையும் புறக்கணித்தது போன்ற, புறக்கணிப்பு நடவடிக்கையையே தமிழ்நாடு மீனவர்களிடத்தும் முன்னெடுத்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.

banner

Related Stories

Related Stories