இந்தியா

”அழகான பெண்கள்” - பா.ஜ.க கூட்டணி ஆதரவு MLA சர்ச்சை பேச்சு : மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா பா.ஜ.க கூட்டணி ஆதவு MAL பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

”அழகான பெண்கள்” - பா.ஜ.க கூட்டணி ஆதரவு MLA சர்ச்சை பேச்சு : மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக் கொண்டு பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து தற்போது துணை முதலமைச்சாராக இருப்பவர் அஜித் பவார்.

இவரின் ஆதரவாளரான சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் தேவேந்திர புயர் அமராவதியில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது அவர், ”அழகாக இருக்கும் எந்த பெண்ணும் விவசாயியின் மகனை திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். அழகு குறைந்த மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள்தான் விவசாயியின் மகனை திருமணம் செய்து கொள்கிறார்கள்.” என சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

தற்போது, இவர் பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பெண்கள் அமைப்புகள் தேவேந்திர புயர் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

”ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் தங்கள் எம்எல்ஏக்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இது பெண்களை அவமதிப்பதாகவும், உணர்வற்றதாகவும் உள்ளது" என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories