இந்தியா

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி : தென் மாநிலங்களின் பங்கு 30% !

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில், தென் மாநிலங்களின் பங்கு மட்டும் 30 சதவிகிதம் என பொருளாதார வழிக்காட்டுதல் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி : தென் மாநிலங்களின் பங்கு 30% !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றியத்தில் பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொருளதார வழிக்காட்டுதல் குழு, பிரதமர் நரேந்திர மோடியிடம் உள்நாட்டு உற்பத்தி குறித்த அறிக்கை ஒன்றை அளித்தது.

அந்த அறிக்கையில்,இந்திய மாநிலங்களின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தி சதவிகிதம் 30% என தெரியவந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பொருளாதார ரீதியில் சரிவை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 15 லிருந்து 13 புள்ளி மூன்று சதவிகிதமாக சரிந்துள்ளது.

அதே சமயம், உத்தரபிரதேச மாநிலம் ஒன்பது புள்ளி ஐந்து சதவிகிதமாகவும், பீகார் நான்கு புள்ளி மூன்று சதவிகிதமாகவும் இந்தியா பொருளாதார உள்நாட்டு உற்பத்தியில் இடம் பிடித்துள்ளது.

banner

Related Stories

Related Stories