இந்தியா

”மணிப்பூர் மாநிலத்தை திட்டமிட்டு தவிர்க்கும் பிரதமர் மோடி” : ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

மணிப்பூர் மாநிலத்தை பிரதமர் மோடி திட்டமிட்டு தவரித்து வருகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

”மணிப்பூர் மாநிலத்தை திட்டமிட்டு தவிர்க்கும் பிரதமர் மோடி” : ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்திற்கு இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மோதல்போக்கு இருந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டும், அப்பாவி குழந்தைகள் நடுத்தெருவிற்கு வந்தும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி முகாம்களில் வாழ்க்கை நடத்தும் நிலை இன்று வரை தொடர்கிறது.

மாநிலத்தை இயல்புநிலைக்கு கொண்டுவராமல் பா.ஜ.க அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பல முறை மணிப்பூர் மக்களை நேரில் சந்தித்துள்ளார்.

ஆனால் ஒரு முறைகூட இந்நாட்டின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி மணிப்பூர் பக்கமே எட்டிக்கூட பார்க்காமல் இருந்து வருகிறார். ஆனால் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் கூட புரூனே புறப்பட்டு சென்றுவந்துள்ளார்.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தை பிரதமர் மோடி திட்டமிட்டு தவரித்து வருகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”ஒரு வருடத்திற்கு மேலாக மணிப்பூர் பற்றி எரிகிறது. வன்முறை குறித்து விசாரிக்க 2023 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி மூன்று நபர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழு இதுவரை எந்த ஒரு அறிக்கைகையும் சமர்பிக்கவில்லை. வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிடும் பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்தை மட்டும் திட்டமிட்டு தவிர்க்கிறார்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories