இந்தியா

“கடல்சார் பணியாளர்களின் வளர்ச்சி மிகவும் முக்கியம்!” : கோவா கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், கோவாவில் நடைப்பெற்ற கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமக் கூட்டத்தில் பங்குப்பெற்று உரையாற்றினார்.

“கடல்சார் பணியாளர்களின் வளர்ச்சி மிகவும் முக்கியம்!” : கோவா கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் கடல்சார் துறையை மேம்படுத்துவதில், கடலோர மாநிலங்களின் பங்களிப்பு மற்றும் கூட்டு முயற்சியை வலுப்படுத்தும் விதமாக இன்று (13.09.2024) கோவாவில் நடைப்பெற்ற கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் பங்குப்பெற்று உரையாற்றினார்.

அவர் தெரிவித்ததாவது, “துறைமுக வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.10.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி. இந்த நிதி உதவியானது நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையே பாதுகாப்பான மற்றும் வசதியான கப்பல் சேவைகளை உறுதி செய்வது முக்கியமானதாகும் மற்றும் இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்தும்.

நாகப்பட்டினம் துறைமுகத்தின் விரிவாக்கத்திற்காக, சாகார்மாலா திட்டத்தின்கீழ் ரூ.300 கோடி நிதியுதவி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் நடுத்தர அளவிலான சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்களை கையாளுவதற்கும், இலங்கையுடனான வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் உதவும்.

“கடல்சார் பணியாளர்களின் வளர்ச்சி மிகவும் முக்கியம்!” : கோவா கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

கடல்சார் பணியாளர்களின் மேம்பாடு மற்றும் திறன்மேம்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, தூத்துக்குடியிலுள்ள தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனத்தின் முக்கியத்துவம் முன்னிலைப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டின் தென் கடற்கரையோரத்தில் வாழும், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மீனவர் சமூகங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டுத் திட்டங்களையும், குறிப்பாக இந்திய மற்றும் வெளிநாட்டு கப்பல்களில் மாற்று வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.

தூத்துக்குடியிலுள்ள இந்த தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக சாகர்மாலா திட்டத்தின், கடலோர சமூக மேம்பாட்டின்கீழ், 100% சதவீத நிதியுதவியாக ரூ.11.47 கோடிக்கான அனுமதி விரைவில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வரலாற்று சிறப்புமிக்க இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் பொருளாதார மதிப்பு பெற்றுள்ளது. இந்த சேவை ஒரு காலத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான முக்கிய இணைப்பாக அடையாளப்படுத்தப்பட்டது.

இக்கப்பல் சேவையினை மீண்டும் தொடங்க இராமேஸ்வரத்தில் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த 100% சதவீத நிதியுதவி வழங்க வேண்டும். இதன் மூலம் இப்பகுதியில் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தற்போது நடைப்பெற்று வரும் மிதக்கும் தோணித்துறை பணிகளுக்கு ஒப்புதல் வழங்கியதற்காக நன்றி.

“கடல்சார் பணியாளர்களின் வளர்ச்சி மிகவும் முக்கியம்!” : கோவா கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!

இராமேஸ்வரம் தீவு, ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இந்த முக்கியமான தீவின் இணைப்பினை வலுப்படுத்தவும், சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்தவும், மண்டபம், பாம்பன் மற்றும் தேவிபட்டினத்தில் கூடுதலாக மூன்று மிதக்கும் தோணித்துறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குஜராத்திலுள்ள லோத்தலில் தேசிய கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியக வளாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஒரு வளமான கடல்சார் வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும், இந்த பாரம்பரியத்தை மாநில அரங்கில் காட்சிப்படுத்துவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். தமிழ்நாடு மாநில அரங்கினை உருவாக்குவதற்கு இந்திய அரசு 100% சதவீத நிதியுதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்கள் வளர்ச்சி பெறவும், மாநில அரசினுடைய பொருளாதாரம் மேம்பாடு அடையவும், உந்து சக்தியாக ஒன்றிய அரசு உதவிட வேண்டும்.

“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்ற முதுமொழிக்கேற்ப தமிழ்நாடு மக்கள் பயன் அடையும் விதமாக நடைபெறும் இந்த கருத்தரங்கிற்கு, முதலமைச்சர் சார்பாகவும், என் சார்பாகவும் நல்வாழ்த்துகள்” என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories