இந்தியா

காஷ்மீரிலும் திராவிட மாடல் திட்டம் : காங்கிரஸ் கட்சி வெளியிட்ட 5 தேர்தல் வாக்குறுதிகள் என்ன?

ஜம்மு-காஷ்மீரில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.

காஷ்மீரிலும் திராவிட மாடல் திட்டம் : காங்கிரஸ் கட்சி வெளியிட்ட 5 தேர்தல் வாக்குறுதிகள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு செப்.18 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - பேந்தர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்த “இந்தியா” கூட்டணி போட்டியிடுகிறது.

அதேபோல் பா.ஜ.கவும், ஜனநாயக கட்சியும் தனித்தனியாக இந்த தேர்தலை சந்திக்கிறார்கள். இதனால் மும்முணை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளது. அனந்த்நாக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.

மேலும்,அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சத்தில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும். ஒரு லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்புதல், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 11 கிலோ அரிசி வழங்கப்படும். சுய உதவிக் குழுப் பெண்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் குடியேறிய காஷ்மீர் பண்டிட்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பரப்புரை மேற்கொண்டார்.

banner

Related Stories

Related Stories