ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ரயில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 20 ரயில் விபத்துகள் நடந்துள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளது.
ரயில் விபத்துகளை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் இந்தூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் இந்தூர் - ஜபல்பூர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் மெதுவாக சென்றதால் இரண்டு பெட்டிகள் மட்டுமே தடம் புரண்டுள்ளது. இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் , ரயில்வே துறை குறித்து ஒரு வார்த்தைக் கூட இடம் பெறவில்லை. ஒன்றிய அரசுக்கு மக்கள் உயிர்கள் பற்றி கவலையில்லை என்பது இதில் இருந்தே தெளிவாக தெரிகிறது.