இந்தியா

பெண்கள் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்: கொல்கத்தா நீதிமன்ற கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் !

பெண்கள் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்: கொல்கத்தா நீதிமன்ற கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கொல்கத்தாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தான் காதலித்து வந்த இளைஞர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் அந்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து இளைஞர் சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி வெளியிடப்பட்ட தீர்ப்பு இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ் ஓகா மற்றும் உஜ்ஜால் பயூன் ஆகியோர் அடங்கிய வழங்கிய தீர்ப்பில், பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண், தண்டனை விதிக்கப்பட்ட இளைஞரை காதலித்திருக்கிறார். ஆகையால் அந்த இளைஞருக்கு தண்டனை விதிக்கப்பட்ட உத்தரவையும், அவருக்கு வழங்கிய தண்டனையையும் ரத்து செய்வதாக தீர்ப்பு அளித்தனர்.

பெண்கள் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்: கொல்கத்தா நீதிமன்ற கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் !

மேலும், பெண்கள் பாலியல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பாலியல் உணர்வுகள் தூண்டுதலுக்குள்ளாகி கண்ணியத்தையும் சுயமரியாதையையும் இழந்து தோற்றுவிடக் கூடாது என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட நிலையில், இளைஞரும் விடுதலை செய்த கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையையும் உறுதி செய்தது. மேலும் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கும் கண்டனம் தெரிவித்து அதனை நீக்கவும் உத்தரவிட்டது.

banner

Related Stories

Related Stories