இந்தியா

பாலத்தில் குதிக்க முயன்ற பெண் : உயிரை காப்பாற்றிய கார் ஓட்டுநர் - பதறவைக்கும் Video!

மும்மையில், பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற பெண்ணை கார் ஓட்டுநர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலத்தில் குதிக்க முயன்ற பெண் : உயிரை காப்பாற்றிய கார் ஓட்டுநர்  - பதறவைக்கும் Video!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையின் வடகிழக்கில் உள்ள முலுண்டல் பகுதியைச் சேர்ந்தவர் ரீமா முகேஷ் படேல். 56 வயதான இவர் அடல் சேது பாலத்தின் விளிம்பில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த கார் ஒட்டுநர் ஒருவர் அவரது உயிரை காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீமா முகேஷ் படேல் அடல் சேது பாலத்தின் தடுப்புகளை மீறி விளிம்பில் நின்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த கார் ஓட்டுநர் அவருடன் பேசிக் தற்கொலையை தடுக்க முயன்றுள்ளார். அப்போது உடேன ரீமா முகேஷ் படேல் குதித்துள்ளார். உடனே கண் இமைக்கும் நேரத்தில் அவரது தலைமுடியை பிடித்து கீழே விழாதவாறு பிடித்துக் கொண்டுள்ளார்.

பிறகு அங்கு வந்த ரோந்து போலிஸார், கார் ஓட்டுநருடன் சேர்ந்து ரீமா முகேஷ் படேலை பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரீமா முகேஷ் படேல் தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நொடிப்பொழுதில் உயிரை காப்பாற்றிய கார் ஓட்டுநருக்கு போலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories