இந்தியா

“வரலாறு காணாத பிரிவினை பேசும் பிரதமர் மோடி!” : உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிபல் கண்டனம்!

“வரலாறு காணாத பிரிவினை பேசும் பிரதமர் மோடி!” : உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிபல் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் 78ஆவது விடுதலை நாள் விழாவில் பேசிய பிரதமர் மோடி, பல சர்ச்சை பேச்சுகளை முன்வைத்தார். நடப்பு சட்டங்களில் வகுப்புவாதம் இருப்பதாகவும், அதற்காகவே, பொது சிவில் சட்டம் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையால், மக்கள் கடும் சினத்திற்குள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவித்தார். இதற்கு பதிலடி தரும் வகையில், எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும், மோடி அவர்கள், தன்னைப்பற்றி பேசுகிறாரா? என கேள்வி எழுப்பி, மோடி ஆட்சியில் நடக்கும் வன்முறைகளை பட்டியலிட்டனர்.

அவ்வகையில், மோடியின் சர்ச்சை பேச்சு குறித்து, கருத்து தெரிவித்த மாநிலங்களவை உறுப்பினரும், உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவருமான கபில் சிபல்,

“இந்திய வரலாற்றை சற்று ஆராய்ந்தால், நடப்பு பிரதமர் போல பிரிவினை பேசுபவர், இதற்கு முன் இருந்ததில்லை. உத்தரப் பிரதேசத்தில் கடை உரிமையாளர்கள் பெயர் தெரிய வேண்டும் என்பது, வங்காளதேசத்தில் இருந்து இந்தியா வர விரும்பும் இந்து பெண்களுக்கு அனுமதி மறுப்பது, கூடுதலாக பொது சிவில் சட்டம் முன்மொழிவு என அனைத்தும் பிரிவினைவாத அரசியல் தான்.

ஒன்றிய பா.ஜ.க.வினர், ஊடுருவல் குறித்து பேசுகின்றனர். ஆனால், உண்மையில் யார் ஊடுருவுகின்றனர்? இவர்கள் தான், அரசியல் அமைப்பில் ஊடுருவி, ஜனநாயகத்தின் அடிப்படையை நசுக்குகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories