இந்தியா

”மோடி ஆட்சியில் சாபமாக இருக்கும் வேலையின்மை” : மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்!

மோடி ஆட்சியில் வேலையின்மை மிகப்பெரிய சாபமாக உள்ளது என மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.

”மோடி ஆட்சியில் சாபமாக இருக்கும் வேலையின்மை” : மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வேலையின்மை அதிகரித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியா கூட்டணியின் முக்கிய பிரச்சாரமாக வேலையின்மை இருந்தது. தற்போது தினம் தினம் வேலைத்தேடி வீதி வீதியா லட்சக்கணக்கான இளைஞர்கள் அலையும் செய்திகளும், வீடியோக்களும் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை சாபமாக மாறிவிட்டது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதவில், ”மோடி ஆட்சியில் வேலையின்மை மிகப்பெரிய சாபமாக உள்ளது. மகாராஷ்டிராவில் 1257 போலிஸ் கான்ஸ்டபிள் பணிக்கு 1.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நேர்காணலுக்கு வந்த பலரும் சிறு குழந்தைகளுடன் சாலையிலேயே தங்களது இரவுகளை கழித்துள்ளனர்.

கடந்த மாதம் மும்பை விமான நிலையத்தில் பார்சல்கள் ஏற்றும் 2216 காலியிடங்களுக்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். லட்சக்கணக்கான இளைஞர்கள் தினமும் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்காமல் இளைஞர்களுக்கு பா.ஜ.க அரசு துரோகம் இழைத்துவிட்டது." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories