இந்தியா

மூளையை தின்னும் அமீபா காய்ச்சல் - 4 பேர் மருத்துவமனையில் அனுமதி : எங்கு தெரியுமா?

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூளையை தின்னும் அமீபா காய்ச்சல் - 4 பேர் மருத்துவமனையில் அனுமதி : எங்கு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கன்னரவிளையைச் சேர்ந்தவர் அகில். இளைஞரான இவர் கடந்த மாதம் 23 ஆம் தேதி அமீபா மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 4 நண்பர்களுக்கும் மூளை காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்துள்ளது.

இதையடுத்து இவர்கள் நான்கு பேரும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து தேங்கி நிற்கும் நீர்நிலைகளிலும், பாசிகள் வளர்ந்துள்ள நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற சூடான நன்னீர் நீரில் வாழும் இந்த வகை அமீபாக்கள் மனிதருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. ஏரி, குளங்களில் குளிக்கும்போது இந்த அமீபா நம் மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும். பின் மூளையை அடைந்து அதன் செல்களை கொஞ்சம் கொஞ்சமாக உண்ணத் தொடங்கும். இதனால் அதிகபட்சம் உயிரிழப்புகள் வரை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories