இந்தியா

"ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஒரு பொய்யர்" : உரிமை மீறல் நோட்டிஸ் வழங்கிய காங்கிரஸ்!

ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஒரு பொய்யர் என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

"ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஒரு பொய்யர்" : உரிமை மீறல் நோட்டிஸ் வழங்கிய காங்கிரஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கி, 23-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், இதன் மீதான விவாதம் முடிவடைந்து கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று விவசாயத்துறை மீதான விவாதத்தில் ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசினார். அப்போது, ”காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லை” என குற்றம்சாட்டினார். மேலும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு அவையில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பிக்கள் ரந்தீப் சிங் சுர்ஜோவாலா, திக்விஜய் சிங் ஆகியோர்," பொய்யான தகவல்களை கூறி அவையை தவறாக வழிநடத்த ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் முயற்சிக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு இடுபொருள் செலவில் 50% குறைந்த விலையில் வழங்குவதாக எப்போதும் கூறி வருகிறார். ஆனால் 2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் பாஜக அரசு அது சாத்தியமில்லை என்று கூறியுள்ளது. இதுதான் உண்மை.

மத்திய பிரதேசத்தில் 2003 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் 7 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெற்றிருந்ததாக கூறுகிறார். ஆனால் 1997-98ல் மாநிலத்தில் 33 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன.

காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லை என கூறுகிறார். இதுவும் பொய். கமல்நாத் முதல்வராக இருந்தபோது, ​​37 லட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது” என தெரிவித்துள்ளனர்.

மேலும், அவையில் பொய்யான தகவல்களை சொன்ன ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மக்களைவையில் உரிமை மீறல் நோட்டிஸ் வழங்கியிருக்கிறது காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories