இந்தியா

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் குளறுபடி : தேர்தல் ஆணையத்திற்கு எதிராக 92 மனுக்கள் தாக்கல்!

இந்தியாவின் 15 மாநிலங்களின் 79 மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 4.65 கோடி அளவிற்கு திடீரென உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் குளறுபடி : தேர்தல் ஆணையத்திற்கு எதிராக 92 மனுக்கள் தாக்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல், பல்வேறு சர்ச்சை நிகழ்வுகளுடன் நடந்து முடிந்தது.

பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் பல பகுதிகளில் சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர்கள் வலுக்கட்டாயமாக வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பா.ஜ.க நிர்வாகிகளும், பா.ஜ.க.வினர் தொடர்புள்ளவர்கள் பலரும், தேர்தல் வாக்குச்சாவடிகளை விளையாட்டுக்களமாக கையாண்டதும், இணையத்தில் வெகுவாக பரவியது.

இது குறித்து, தேசிய அளவில் பல்வேறு விமர்சனங்கள் குவிந்தும், தேர்தல் ஆணையம் பல நிகழ்வுகளை வேடிக்கை பார்த்தது சர்ச்சையானது.

இந்நிலையில், தேர்தல் வாக்களிப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்ட ஏ.டி.ஆர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் 15 மாநிலங்களின் 79 மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 4.65 கோடி அளவிற்கு திடீரென உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்தியாவின் பல மாநில உயர்நீதிமன்றங்களில் தேர்தல் ஆணையத்தின் அலட்சிய நடவடிக்கைகளுக்கு எதிராக இதுவரை சுமார் 92 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories