இந்தியா

”மனித நேயத்தை அரசியலாக்குவது துரதிர்ஷ்டவசமானது” : நிலச்சரவு குறித்த தேஜஸ்வி கருத்துக்கு சசி தரூர் கண்டனம்

கேரள நிலச்சரவு குறித்த தேஜஸ்வி சூர்யாவின் கருத்துக்கு சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”மனித நேயத்தை அரசியலாக்குவது துரதிர்ஷ்டவசமானது” : நிலச்சரவு குறித்த தேஜஸ்வி கருத்துக்கு சசி தரூர் கண்டனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி கொண்டன.

இதனைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கையில் பேரிடர் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது. நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 190 பேர் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் இதுவரை இல்லாத பேரிழப்பு என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனையுடன் கூறியுள்ளார்.

இதற்கிடையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், ”இந்த சவாலான நேரத்தில் வயநாட்டு மக்களுக்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவுக்கு இடதுசாரிகளும், காங்கிரஸும்தான் காரணம் என்று தேஜஸ்வி சூர்யா கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல், அரசியல் நோக்கத்துடன் கூறியுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

காங்கிரஸ் MP சசி தரூர்,””நாடாளுமன்றத்தில் தேவையில்லாமல் நெருக்கடியான நேரத்தில் மனித நேயத்தை அரசியலாக்குவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.மீட்புப் பணிகள் முடிவதற்குள் 200க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்திருக்கிறோம்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ”வயநாடு நிலச்சரிவு சம்பவம் என்பது சோகத்தை மட்டுமே விவாதிக்க வேண்டிய தருனம் இது. எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு அரசியல் லாபநோக்கத்தோடு தனது ஸ்கோர் செய்ய முயற்சிக்கிறது. இது நியாயமற்றது” காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பதிலடி கொடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories