இந்தியா

ஆங்கிலத்தில் பேசக் கூறிய ஆசிரியர்... பள்ளியை மூட வேண்டும் என போராடிய ABVP அமைப்பு - ம.பி.யில் அதிர்ச்சி !

ஆங்கிலத்தில் பேசக் கூறிய ஆசிரியர்... பள்ளியை மூட வேண்டும் என போராடிய ABVP அமைப்பு - ம.பி.யில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தின் குணா பகுதியில் வந்தனா கான்வென்ட் என்ற பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆங்கில வழி கல்வி பள்ளியான இங்கு, ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சூழலில் இங்கு தலைமை ஆசிரியரின் சகோதரி கேத்தரின் வடோலி என்பவர், ஆங்கிலத்தில் மாணவர்கள் புலமையாக பேச வேண்டும் என்று எண்ணி, இனி அனைவரும் ஆங்கிலத்தில் உரையாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர், 4 மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுச்சி சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்றும், அதற்காக தயாராக வேண்டும் என்றும் கால அவகாசம் கொடுத்துள்ளார். இதையடுத்து கடந்த 15-ம் தேதி, அந்த மாணவர்களில் 2 பேர், சக மாணவர்கள் முன்பு ஆங்கிலத்தில் பேச அழைத்துள்ளார் ஆசிரியர் கேத்ரின்.

ஆங்கிலத்தில் பேசக் கூறிய ஆசிரியர்... பள்ளியை மூட வேண்டும் என போராடிய ABVP அமைப்பு - ம.பி.யில் அதிர்ச்சி !

அப்போது அங்கு வந்த 2 மாணவர்களில் ஒருவர், ஸ்லோகம் ஒன்றை பாட தொடங்கியுள்ளார். அப்போது அந்த ஆசிரியை நிறுத்துமாறு கூறியும், இந்த மாணவர் தொடர்ந்து பாடியுள்ளார். இதனால் மற்றொரு மாணவனிடம் கூறி, அந்த மாணவன் கையில் இருந்த மைக்கை வாங்கியுள்ளார். இதையடுத்து அனைவரும் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தி, அந்த 2 மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச தயாராக மேலும் கால அவகாசம் கொடுத்துள்ளார்.

இந்த சூழலில் இந்த சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு பிறகு உள்ளூர் பத்திரிகையில் இது குறித்து செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஆசிரியை கேத்ரின், மாணவர்களை சமஸ்கிருதத்தில் ஸ்லோகன் பாட அனுமதிக்கவில்லை என்றும், மாணவர்களுக்கு தண்டனை வழங்கினார் என்றும் இடம்பெற்றுள்ளது. இந்த செய்தி வைரலான நிலையில், இந்துத்துவ அமைப்பான RSS-ன் மாணவர் அமைப்பான ABVP இதற்கு போராட்டம் நடத்தியது.

ஆங்கிலத்தில் பேசக் கூறிய ஆசிரியர்... பள்ளியை மூட வேண்டும் என போராடிய ABVP அமைப்பு - ம.பி.யில் அதிர்ச்சி !

மேலும் அந்த ஆசிரியை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பள்ளிக்குள் புகுந்து தகராறு செய்தது. அதோடு அந்த பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்றும் போராட்டத்தில் இறங்கியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பூதாகரமான நிலையில், சர்ச்சையில் சிக்கிய ஆசிரியர் கேத்ரின், "மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்காகதான், ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது என்றும், மத உணர்வுகளை யாரும் புண்படுத்தவில்லை என்றும், ஒருவேளை யாராவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த நிகழ்வை பாஜகவின் மாணவர் அமைப்பு கைவிடுவதாக தெரியவில்லை. அந்த பள்ளிக்குள்ளே புகுந்து மாணவர்கள், ஒவ்வொரு நாள் காலை இறை வணக்கத்தின்போது அனைத்து மாணவர்களும் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொல்ல வேண்டும் என்றும், தினமும் தான் அதை வந்து கண்காணிப்பதாகவும் ABVP அமைப்பின் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆங்கிலத்தில் பேசக் கூறிய ஆசிரியர்... பள்ளியை மூட வேண்டும் என போராடிய ABVP அமைப்பு - ம.பி.யில் அதிர்ச்சி !

எல்லாவற்றுக்கும் மேலாக, ABVP அமைப்பினர் பள்ளிக்குள் அத்துமீறி புகுந்து மாணவர்களையும் 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷங்களை எழுப்பி வற்புறுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி கண்டனங்கள் குவிந்து வருகிறது. மேலும் மாணவர்கள் மத்தியில் மதம் சார்ந்த வெறுப்புணர்வை விதைக்க நினைக்கும் பாஜக மற்றும் அதன் அமைப்புகளுக்கு எதிராக கருத்துகளும் குவிந்து வருகிரியாது.

அந்த பள்ளியில் ஒவ்வொரு நாளும் மாணவர்கள் கீதை, குரான், குரு கிரந்த சாஹிப், பைபிள் போன்ற பல்வேறு மத நூல்களை காலை இறை வணக்கத்தின்போது பாடுவது வழக்கம். ஆனால் அன்றைய நாளில் மாணவர்களுக்கு எந்த மொழியில் வாசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதோ, அந்த மொழியில்தான் வாசிக்க வேண்டும்.

சம்பவம் நிகழ்ந்த நாளன்று, மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் வாசிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து. ஆனால் ஒரு மாணவர், வேறு மொழியில் பாடியதால், மைக் பிடுங்கப்பட்டது என்று பள்ளி தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories