இந்தியா

ஒன்றிய பட்ஜெட்டில் இடம் பெற்ற திராவிட மாடல் அரசின் திட்டங்கள் : அது என்ன?

திராவிட மாடல் அரசின் திட்டங்கள் பல ஒன்றிய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.

ஒன்றிய பட்ஜெட்டில் இடம் பெற்ற திராவிட மாடல் அரசின் திட்டங்கள் : அது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மேலும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று ஒன்றிய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த ஒன்றிய பட்ஜெட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின், நடைமுறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் பல திட்டங்கள் இடம் பெற்றுள்ளது.

”பணிபுரியும் பெண்களுக்கு நாடு முழுவதும் சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்” என ஒன்றிய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஆனால், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அறிவிப்பதற்கு முன்பே பணிபுரியும் பெண்களுக்கு தோழி விடுதி திட்டத்தை நடைமுறைபடுத்தி வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

ஒன்றிய பட்ஜெட்டில் இடம் பெற்ற திராவிட மாடல் அரசின் திட்டங்கள் : அது என்ன?

அதேபோல்,”1 கோடி இளைஞர்களுக்கு 500 முன்னணி நிறுவனங்களில் பயிற்சிப் பணி வாய்ப்புகள் வழங்கப்படும்" என்றும் பட்ஜெட்டில் அறிவிப்பப்பட்டுள்ளது.

இவர்கள் அறிவிப்பதற்கு முன்பே , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தால் 28 லட்சம் மாணவர்கள் பயனடைந்து உள்ளனர். மேலும் 1,48, 149 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.வர்களுக்கு மைக்ரோசாப்ட், ஐபிஎம், இன்ஃபோசிஸ், எஸ்.ஏ.பி, கூகுள் கேம்பிரிட்ஜ், சிமன்ஸ், டசால்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உடன் இணைந்து பயிற்சி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திராவிட மாடல் அரசின் திட்டங்களை காப்பி அடித்து ஒன்றிய பா.ஜ.க அரசு புதிய அறிவிப்புகள் போல் அறித்துள்ளது.

banner

Related Stories

Related Stories