இந்தியா

”ஒன்றிய அமைச்சருக்கு நீட் தேர்வின் பிரச்சனை இன்னும் புரியவில்லை” : ராகுல் காந்தி பேச்சு!

இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நீட் வினாத்தாள் கசிவு குறித்து எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

”ஒன்றிய அமைச்சருக்கு நீட் தேர்வின் பிரச்சனை இன்னும் புரியவில்லை” : ராகுல் காந்தி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நாளை ஒன்றிய நிதிநிலைலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றம் தொடங்கிய உடனே எதிர்க்கட்சிகள் நீட் வினாத்தாள் கசிவு குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ”நாடுமுழுவதும் ஒன்றிய அரசின் தேர்வு முறை கேள்விக்குறியாகிவிட்டது. பணக்கார மாணவர்களுக்காக மட்டுமே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. பணம் இருந்தால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்கள் பெரும் கவலையில் இருக்கின்றனர். அமைச்சருக்கு அடிப்படை பிரச்சினை புரியவில்லை. இந்திய தேர்வு, முறைகேடுதான் என்பதை மாணவர்கள் புரிந்திருக்கின்றனர். பணம் இருந்தால், இந்தியத் தேர்வுகளை விலைக்கு வாங்கி விட முடியுமென அவர்கள் நம்புகிறார்கள். அமைப்பு சார்ந்த பிரச்சினையான இதற்கு நீங்கள் கொடுக்கும் தீர்வு என்ன?" என கேள்வி எழுப்பினார்.

மேலும் தி.மு.க MP கலாநிதி வீராச்சாமி,” நீட் தேர்வால் அனிதா உள்ளிட்ட பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.நாடாளுமன்றத்தில் நீட தொடர்பாக விவாதம் நடக்கும் போதெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பிரதமர் வராமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கூட்டத் தொடரில் நிதி மசோதா, பேரிடர் மேலாண்மை மசோதா, கொதிகலன்கள் மசோதா, உள்ளிட்ட 6 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories