பணத்தை சேமித்து பழகு என்று பெரியவர்கள், சிறுவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். மேலும் பாட புத்தகங்களில் கூட சேமிப்பின் அவசியங்கள் இடம் பெற்று இருக்கும்.
நாம் சேமித்து வரும் பணம் பல நேரங்களில் கஷ்ட காலங்களில் கை கொடுத்து இருக்கும். இந்நிலையில் கேரளாவில் சிறுமி சேமித்து வந்த பணம் அவரது தந்தையின் வீட்டு கடனை அடைக்க உதவியுள்ளது.
கேரள மாநிலம் கருவாரகுண்டி பகுதியைச் சேர்ந்தவர் இப்ராகிம். இவரது மகள் நஷ்வா. இவர் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு புதிதாக வெளியிட்ட 20 ரூபாய் நோட்டு மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தந்தையிடம் இருந்து தினமும் 20 ரூபாய் நோட்டை வாங்கி சேமிக்கத் தொடங்கியுள்ளார். மகளின் இந்த பழக்கத்தை கண்டு அவரது தந்தையும் தனக்கு கிடைத்த 20 ரூபாய் நோட்டை இரண்டு வருடங்கலாக கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், மகள் சேமித்து வைத்த பணத்தை எண்ணிப்பார்த்துள்ளனர். அப்போது ஒரு லட்சத்து 3000 ஆயிரம் இருந்துள்ளது. இந்த பணத்தை வைத்து வீட்டுக்கடனை அவரது தந்தை அடைத்துள்ளார்.மேலும் மகளுக்கு ஒரு நல்ல பரிசையும் வாங்கி கொடுத்துள்ளார்.