இந்தியா

ஹத்ராஸ் சம்பவம் - சாமியார் போலே பாபாவும் குற்றவாளி : 885 பக்க விசாரணை அறிக்கை தாக்கல்!

ஹத்ராஸ் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சாமியார் போலே பாபாவும் குற்றவாளி என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹத்ராஸ் சம்பவம்  - சாமியார் போலே பாபாவும் குற்றவாளி : 885 பக்க விசாரணை அறிக்கை தாக்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் கடந்த 2ஆம் தேதி ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. சாமியார் போலே பாபாவின் பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 121 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மாநில அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழு தனது 885 பக்க விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதில், அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகமாக கூட்டத்தை கூட்டியதும், கூட்டம் பாதுகாப்பாக வெளியேறுவற்கும் போதிய ஏற்பாடுகள் செய்யாததே விபத்திற்கு காரணம் என்றும் இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்யவில்லை என்றும், கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது அதனை தடுக்க காவல்துறையினரும் சாமியார் போலே பாபாவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தை நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஹாத்ரஸ் விபத்து குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஹாத்ரஸ் துணை ஆட்சியர், தாசில்தார், காவல் ஆய்வாளர், 2 காவலர்கள் உட்பட ஆறு பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories