இந்தியா

ரூ.302 கோடி போதைப்பொருள் பறிமுதல் : பாஜக ஆளும் மாநிலங்களில் அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்!

பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் ரூ.302 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.302 கோடி போதைப்பொருள் பறிமுதல் : பாஜக ஆளும் மாநிலங்களில் அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றியத்தில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, நாடுமுழுவதும் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து காணப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவருகிறது.

கடந்த மே 15 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்து செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் விசாரித்தபோது, மகாராஷ்டிரா, உத்தப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட இடங்களில் மிகப் பெரிய போதைப்பொருள் நெட் ஒர்க் இயங்கி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதேபோல், பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் ரூ.200 கோடி மதிப்புள்ள போதை பொருளை போலிஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குஜராத்தில் 16.80 லட்சம் அளவிலான போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தெலங்கானாவிலும் ரூ. 25 கோடி மதிப்புள்ள மூலப் பொருட்களும் சிக்கின. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, போதை பொருட்களின் கூடாரமாக இம்மாநிலங்கள் மாறியுள்ளது காட்டுகிறது.

banner

Related Stories

Related Stories